கார் வாங்க மகனை விற்ற தாய் !



  குழந்தையை விக்கிற சம்பவங்கள் ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் தான் அதிகம் இடம்பெறுகின்றமை வழக்கம்.

ஆனால் தற்போது அமெரிக்காவில் தான் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. புதிய கார் வாங்க பணத்தை செலுத்துவதற்காக அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது மகனை விற்க முயன்றுள்ளார்.

குழந்தையின் பாட்டியின் ஏற்பாட்டில் 75000 டொலருக்கு பிள்ளையை விலைபேசி கடைசியில் 30000 டொலருக்கு விற்க முயன்றபோது வசமாகப் பொலிஸாரிடம் மாட்டிக்கொண்டார்.

இந்தத் தாயின் பெயர் ஸ்டீபன் பிக்பீ பிலமிங் வயது 22. இவர் விற்க முயன்றது தனது எட்டு வார ஆண் குழந்தையை.  இந்தக் குழந்தை விற்பனைக்குத் தரகராகப் பணிபுரிந்தவர் குழந்தையின் பாட்டி. தாய்க்குக் கிடைக்கவிருந்த பணம் 9000 டொலர்கள் மட்டுமே என்பது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.



ஒரு புதிய கார் வாங்கும் நோக்கில் தான் பிலமிங் இதற்கு சம்மதித்துள்ளார்.இவர் ஏற்கனவே ஒரு நீதிமன்றப் பிரச்சினையிலும் சிக்கியுள்ளார் அதற்காகவும் இவருக்குப் பணம் தேவைப்பட்டுள்ளது.

இந்தத் தாயும் 45 வயதான குழந்தையின் பாட்டி பெட்டி பிக் பீயும் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக குழந்தையை விற்க முயன்றமை, தொடர்பாடல் மோசடி என இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


அனுப்பியவர் ஷியாம்
source http://tamilcnn.com

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

1 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...