விமானத்தில் தோட்டாக்களை கடத்த முயன்ற பிரபல நடிகரின் ஒப்பனையாளர் கைது! Posted: 15 Dec 2010 11:25 PM PST அமெரிக்காவில் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் சன்னி தியோலுக்கு துப்பாக்கித் தோட்டாக்களைக் கடத்திச் செல்ல முயன்ற ஒப்பனையாளர் மும்பை விமான நிலையத்தில் பிடிபட்டார்.
 |
சூரியக் குடும்பத்தின் எல்லையை நெருங்கும் வாயேஜர்! Posted: 15 Dec 2010 11:56 PM PST அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா கடந்த 1977 ஆண்டு செப்டம்பர் மாதம் ஏவிய வாயேஜர்- 1 எனும் ஆளில்லா விண்கலம் தற்போது நமது சூரியக் குடும்பத்தின் சாத்திய எல்லைகளை கிட்டத்தட்ட அடைந்தே விட்டது. இந்த இருபத்தி மூன்று வருடங்களில் வாயேஜர்- 1 விண்கலம் சுமார் 14.2 பில்லியன் கிலோமீட்டர்கள் (ஒரு பில்லியன் = நூறு கோடி) பயணம் செய்துள்ளது.
 |
சீனப் பிரதமருக்கு எதிராக டெல்லியில் ஆர்ப்பாட்டம் Posted: 16 Dec 2010 03:18 AM PST அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள சீனப் பிரதமர் வென் ஜியாபோவை எதிர்த்து தலைநகர் டெல்லியில் திபெத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி நினைவகம் அமைந்துள்ள ராஜ்காட் பகுதியில் கூடிய ஏராளமான திபெத்தியர்கள், அங்கிருந்து ஜந்தர் மந்தர் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.
 |
ஜனதாதளத்தில் இணைந்தார் பங்காரப்பா Posted: 16 Dec 2010 03:27 AM PST கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான பங்காரப்பா, குமாரசாமி தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்துள்ளார்.
 |
அவதூறு பரப்பினால்... - ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை! Posted: 16 Dec 2010 04:38 AM PST சென்னையில் உள்ள நில மாற்றம் தொடர்பாக ராயல் நிறுவனம் குறித்து தவறான செய்தியை சில மீடியாக்கள் உள்நோக்கத்தோடு வெளியிட்டிருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், இதுபோன்று அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
 |
ஆஸ்திரேலியா படகு விபத்தில் 27 பேர் பலி! Posted: 16 Dec 2010 06:57 AM PST ஆஸ்திரேலியாவில் பயணிகள் கப்பல் ஒன்று பாறைகளில் மோதி கொந்தளிப்பான கடலில் மூழ்கியதில் குறைந்தபட்சம் 27 பேர் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுகள் அருகே நடைபெற்றுள்ளது.
 |
வி.ஏ.ஓ. தேர்வு தேதி அறிவிப்பு Posted: 16 Dec 2010 07:01 AM PST வி.ஏ.ஓ. (கிராம நிர்வாக அதிகாரி) பணியிடங்களுக்கான தேர்வுகள், பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
 |
"பலஸ்தீனரின் உரிமைகளுக்கு முன்னுரிமை " - கலாநிதி அபூசுஹ்ரி Posted: 16 Dec 2010 02:11 PM PST இஸ்ரேலுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இனி பேச்சுவார்த்தைகளை மட்டும் நம்பிக் கொண்டிராமல், பலஸ்தீனர்களின் உரிமைகளை மீட்டெடுக்கக்கூடிய பிற வழிமுறைகளைக் கைக்கொள்ள முன்வருமாறு அரபுநாடுகளை நோக்கி கலாநிதி அபூசுஹ்ரி அழைப்பு விடுத்துள்ளார். |
குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவது 20% ஆக குறைந்தது! யுனிசெஃப் Posted: 16 Dec 2010 02:37 PM PST சென்னையில் தமிழ்நாடு சமூக நல வாரியம் சார்பில் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கை துவக்கி வைத்து பேசிய தமிழக ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் உதயசந்திரன் பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஒரு மணி நேரத்தில், தாய்ப்பால் தர வேண்டியதன் அவசியத்தை மருத்துவர்கள் உணர வேண்டும் என, யுனிசெப் அமைப்பின் உணவியல் நிபுணர் மீனாட்சி மெஹார் பேசினார்.
|
ஓமன் பல்கலைகழகங்களில் ஏராளமான ஆசிரியர் பணி வாய்ப்புகள் Posted: 16 Dec 2010 08:49 PM PST ஓமனில் உள்ள அரசு பல்கலைகழகங்களில் ஏராளமான ஆசிரியர் பணி வாய்ப்புகள் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் (IT), அனைத்து வகையான இஞ்சினியரிங் (All disciplines of engineering including Mechanical, Electrical, Instrumentation, Petro, Oil and gas etc), வணிக மேலான்மை (Business Management), கணிதம், அறிவியல் உள்ளிட்ட ஏராளமான துறைகளில் உள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை நன்கு படித்து தகுதி உள்ளவர்கள் jobs@tatioman.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
 |
ஈரானில் பயங்கர குண்டு வெடிப்பு 39பேர் பலி! Posted: 15 Dec 2010 09:31 PM PST ஈரானின் தென் கிழக்கு நகரமான ஷாபகரில் 100க்கும் மேற்பட்ட ஷியா பிரிவு முஸ்லீம் மக்கள் கூடிஇருந்த கூட்டத்தில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 39 பேர் பலியானார்கள். 60க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
 |
வங்காளதேச தொழிற்சாலை தீ விபத்தில் 29 பேர் பலி! Posted: 15 Dec 2010 09:39 PM PST வங்காளதேசத்தில் டாக்கா நகரில் ஜவுளி ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 29 பேர் பலியானார்கள். 100 பேர் காயம் அடைந்துள்ளனர்.
 |
அதிமுக கூட்டணியுடன் 2014 தேர்தலை சந்திக்க விருப்பம் - அத்வானி Posted: 16 Dec 2010 12:37 AM PST 2G அலைவரிசை ஒதுக்கீடு ஊழல் விவகாரத்தில் நாடாளுமன்ற முற்றுகையில் எங்களுடன் இணைந்த கட்சிகளை ஒருங்கிணைத்து 2014 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள விரும்புவதாக பாஜக மூத்த தலைவர் L.K.அத்வானி விருப்பம் தெரிவித்துள்ளார்.
 |
குடும்ப அட்டைகளில் புதிய பக்கங்கள் சேர்க்கப்படும் Posted: 16 Dec 2010 03:24 AM PST தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ள ஒரு கோடியே 96 லட்சம் குடும்ப அட்டைகளில் 20 லட்சம் போலி அட்டைகள் நீக்கப்பட்டுள்ளதோடு அடுத்த வருடம் 2011 டிசம்பர் வரை பயன்படுத்தும் வகையில் புதிய பக்கங்கள் சேர்க்கப்படும் என்று உணவு, கூட்டுறவு, நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் சுவரண்சிங் தெரிவித்துள்ளார்.
 |
யோகா பயிற்சி மையங்களாகும் சென்னை பூங்காக்கள் : மேயர் தகவல் Posted: 16 Dec 2010 06:41 AM PST சென்னை நகரில் உள்ள 26 பூங்காக்களில் அடுத்த மாதம் முதல் இலவச யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது என, சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 |
0 comments:
Post a Comment