செக்ஸ் ஆபாசம் அல்ல!





நிஜ வாழ்க்கைக்குப் பொருத்தமில்லாத காதல் கதைதகளின் அடிப்படையில் தற்கால திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள்
வெளிவருகின்றன. இதனால், ஆண் பெண் உறவு, திருமண பந்தம் ஆகியவை குறித்த தெளிவான அறிவைப் பெற இளைய
சமுதாயத்துக்கு வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. அவர்கள் கற்பனைக் குதிரையில் உலகை வலம் வருகின்றனர்.

இதனால்தான் பெரும்பாலானோருக்கு திருமணத்துக்குப் பின் ஏற்படும் பிரச்சினைகளைச் சந்திக்கும் மன தைரியமும்
அறிவு முதிர்ச்சியும் இல்லை.

இல்லற வாழ்வு குறித்து..:

இல்லற வாழ்வைத் துவங்கும் முன்பு ஆணும் பெண்ணும் மன ரீதியாகவும் உடலியல் ரீதியாகவும் தாம்பத்யம் குறித்து தெளிவான
அறிவைப் பெறுவது மிகவும் அவசியம்.

திருமணம் என்பது பாலுணர்வு இச்சையை நிறைவு செய்வதற்காக மட்டும் ஏற்பட்டதல்ல. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே
அற்புத உணர்ச்சிகள் அலை புரள பொங்கிப் பெரும் அன்பை மற்றவர்போல் வெளிக்கொணர்வதற்குரிய களமே திருமணம்.

திருமண வயது:

வெறும் இனக்கவர்ச்சியால் ஏற்படும் திருமண வாழ்வு நிறைவை அளிப்பதில்லை. என்பதே அனுபவ உண்மை. திருமண வாழ்வில்
இணைய ஆணுக்கு 24 வயதும், பெண்ணுக்கு 21 வயதும், ஏற்புடையது. சிறப்பான இல்வாழ்விற்கு தம்பதிகளிடையே தோழமை உயர்வும்,
பாலின உடன்பாடும் (Sexual affilliation) அவசியம்.

மருத்துவப் பரிசோதனை:

பண்பு, கல்வி, பொருளாதாரம் என பல்வேறு அம்சங்கள் பொருந்திய போதும் மணமக்கள் இருவரும் திருமணத்துக்கு முன்னர்
மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து கொள்வது நல்லது.

பால்வினை நோய் பாதிப்பு, குழந்தைப் பேறு வாய்ப்புகள், ரத்தப் பிரிவுகள், உடலுறவு ஆகியவை குறித்து இச்சோதனைகள் மூலம்
குறைகளை நிவர்த்தி செய்ய முடியும். பால்வினை நோயால் பாதிக்கப் பட்டு உரிய சிகிச்சை பெறாவிட்டால் பிறக்கும் குழந்தையும்
நோயுடன் பிறக்கும் வாய்ப்புள்ளது.

பெண்களுக்கு உடலுறவுத் தகுதி, மகப்பேறு வாய்ப்புகள் குறித்து நவீன மருத்துவ சோதனை மூலம் அனைத்துத் தகவல்களையும்
பெறலாம். இதே போல் ஆணுக்கு உயிரணுக்கள் உற்பத்தி, இன்ப நுகர்வுக்கான தகுதியையும் அறியலாம்.

இதன் மூலம் திருமண உறவில் மன வேறுபாடுகளைத் தவிர்க்கலாம். சிறிய குறைகளைக் கூட வெளியே சொல்லப் பயந்து
மூடி மறைப்பதால் மணவாழ்வில் சிக்கல் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

ஆணுக்கும் கற்பு அவசியம்:

ஆண்கள் பெண்கள் இருவருக்குமே கற்புநிலை என்பது பொதுவானது. கற்பொழுக்கத்தடன் கூடிய மண வாழ்வே முழு
மகிழ்ச்சியை அளிப்பதாக உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பாலியல் உணர்வால் தவறான பழக்கங்களுக்கு ஆண்கள்
அடிமையாகக் கூடாது. இதனால் அவர்களது வாழ்க்கை திசை மாறிப் போக வாய்ப்பு உள்ளது.

பெண்களே உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்:

ஒரு பெண்ணுக்குப் பருவகாலத்தில் பால் ஊறுப்புகளின் வளர்சசி மற்றும் நாளமில்லாச் சுரப்பிகள் தூண்டுதலாலும் பாலின உணர்வுகள்
கிளிர்ந்தெழுவது இயற்கை. ஆனால், ஒழுக்கக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அறிவு
முதிர்ச்சியுடன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எது காதல்?

கண்டவுடன் காதல் என்பதெல்லாம் வெறும் மாயை. இனக் கவர்ச்சி அடிப்படையிலான உறவை காதல் என்று மனவியல்
நிபுணர்கள் ஏற்பதில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கையிலேயே தோன்றுகின்ற ஒரு இதமான உணர்வே காதல். ஒத்த
மனப்போக்கும் ஒத்துபோகிற குணமும் உள்ள தம்பதியர்வாழ்வு சிறக்கிறது. உணர்ச்சியைப் பிரதானமாகக் கொண்டு நடக்கும் காதல்
திருமணங்கள் வெற்றி பெறுவதில்லை. உடல் கவர்ச்சியால் உந்தப்பட்டு பின்னர் ஏமாற்றமடையும் தம்பதியர் பலர்.

ஆண்களின் மனப்போக்கு:

தனது பலவீனங்களை ஏற்றுக் கொள்ளும் பெண்ணையே பெரும்பாலான ஆண்கள் திருமணத்திற்குப் பின்னர் கணவனைத்
திருத்திக் கொள்ளலாம் என பெண்கள் தங்களது வாழ்வைச் சிதைத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் மது, கூதாட்டம் போன்ற
பழக்கங்கள் இல்லற வாழ்வைச் சிதைத்துவிடும்.

பொருளாதார நிலை:

சிறந்த மணவாழ்வுக்கு பொருளாதார ஏற்றத் தாழ்வு ஒரு பெரும் பிரச்சினையாக இருப்பதில்லை. ஆனாலும் வேலை இல்லாததால்
வருமானம் இல்லாத நிலை, அளவுக்கு அதிகமான கடன் போன்றவற்றால் மண வாழ்வில் சிக்கல்கள் மிகுதியாகின்றன.

செலவிடுவதில்..:

வருவாயைச் செலவிடுவதில் வேறுபட்ட கருத்துகள் தம்பதிகளிடையே இருக்குமானால் பிரச்சினை ஏற்படலாம். புறத் தோற்றம் மட்டுமல்லாது கருத்து இசைவே வாழ்வில் மனமொருமித்த தன்மையைத் தரும். திருமணம் என்பது பாலுணர்வு இச்சையை நிறைவு செய்ய மட்டும் ஏற்பட்டதல்ல.
தம்பதிகள் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு அன்பொழுக வாழ்ந்து சமுதாயக் கடமையாற்றுவதற்கே திருமணம். என்ற இனிய பந்தம்
ஏற்படுத்தப்படுகிறது.

ஆலோசனை:

திருமணத்திற்கு முன்னர் மரபுவழி மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது பயன் அளிக்கும். மணமகள், மணமகனின் பரம்பரையை
மரபுரீதியாக ஆய்வு செய்து அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் உடல், மனோபாவங்களைப் கணிக்கும் திறன் மரபுவழி மருத்துவருக்கு
உண்டு. இத்தகைய மரபியல், உளவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு நம்நாட்டிலும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

பெற்றோரே..:

பெண்களுக்குத் தாயாகும் தகுதி பற்றிய பாலுணர்வு அறிவைப் புகட்டுவதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள்
தங்கள் மகளை இல்லற வாழ்வுக்குத் தயாராக்குவதில்லை. மஞ்சள் நீராட்டு வைபவத்துக்கும் திருமணத்துக்கும் பெரும் பணத்தையும்
நேரத்தையும் செலவிடுகின்றனர். ஆனால் பெண்ணுக்குத் தேவையான திருமண பந்தம், பாலுணர்வு பற்றிய அறிவைப் புகட்டுவதில்
பெற்றோர் அக்கறை காட்டுவதில்லை.

ஆபாச புத்தகங்கள்:

அறிவியல் மற்றும் உடற்கூறு ரீதியாக உண்மைகளை அறயாமல் ஆபாசத்தையும், அருவெறுப்பையும் வெளிப்படுத்தும் தவறான
புத்தகங்கள், தீய ஊடகங்களையும் நாடி தங்களது உடல் மற்றும் மன நலன்கைள இளைஞர்கள் கெடுத்துக்கொள் கின்றனர். விஞ்ஞான
முறைப்படி உடல் சம்பந்தமான உண்மைகளை உணர்ந்து கொள்ள வாய்ப்பு இல்லாததால்தான் அதை அறிந்து கொள்ள இளைஞர்கள்
ஆபாசப் புத்தகங்களை நாடிச் சென்று தப்பும் தவறுமாகப் புரிந்த கொண்டு தங்கள் உடலையும் மன நிலைடியயும் கெடுத்துக்கொள்
கின்றனர்.

பூப்பெய்தியது முதல்..:

பெண்களுக்குப் பருவமடைந்தது முதல் மாதவிடாய் நிற்கும் வரை சராசரியாக 28 நாள்களுக்கு
ஒரு முறை சீராக மாதவிலக்கு ஏற்பட வேண்டும். மாதத்திற்கு இருமுறை அல்லது 2 மாதங்களுக்கு ஒரு முறை என மாதவிலக்கு
ஏற்பட்டாலும் கருவுறுதலுக்கு தடையில்லை. பெண்ணுக்கு 18 வயதைக் கடந்ததும் பருவம் எய்தாமல் இருப்பது மாதவிலக்கு
தொடங்காமை எனப்படுகிறது. இது பெரும்பாலும் நோயின் அறிகுறியாக அமையும்.

மூளையில் உள்ள கீழ்த்தலைமம் (Hypothalamus), மற்றும் தலைமைச் சுரப்பி(Pituitary), கருப்பை, கண்டச் சுரப்சி
(Thyroid), சிறுநீர் பிரித்தி மேவி(Adremal) ஆகியவை ஒருங்கிணைந்து செயலாற்றினால் தான் மாதவிலக்கு ஏற்படும். இதில்
தளர்வு நிலை தோன்றினால் மாதவிலக்கு தோன்றாமலே இருந்துவிடும்.

நடு மூளையில் ஏற்படும் நோய்கள், தலைமைச் சுரப்பியில் கட்டிகள், வளர்ச்சி குன்றிய கருப்பை, கருவணுக்கம், கர்ப்பப் பைச் சுவற்றில்
காச நோயின் தாக்குதல் ஆகியவற்றாலும் மாதவிலக்கு தடைபடுகிறது.

மாதவிலக்கின் போது தூய்மை அவசியம்:

மாத விலக்கு காலத்தில் பெண்கள் மிகவும் தூய்மையான 'நாப்கின்'களை அணிய வேண்டும். நோய்கிருமிகளில் இருந்து
கருப்பையைப் பாதுகாக்க இது உதவும். சுகாதாரத்துடன் இருப்பது குறித்த பருவமடைந்த பெண்களுக்கு விழிப்புணர்வை தாய்
ஏற்படுத்த வேண்டும்.

திருமணத்திற்கு முன் வெள்ளைப் போக்கு அதிகரித்தாலோ, மஞ்சள் நிறமாக கசிவு அல்லது பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட்டாலோ
உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

வெள்ளைப் போக்கு அதிகரிக்க காரணம்:

சர்க்கரை நோய்ப் பாதிப்புள்ள பெண்களுக்கு ஊட்டச் சத்துக் குறைவு காரணமாக வெள்ளைப் போக்கு அதிகரிக்கும். மொனிலியா
என்ற கிருமி பெண்களின் பிறப்புறுப்பைத் தாக்குவதால் வெள்ளைப் போக்கு அதிகம் ஏற்படும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதன்
மூலம் இக்குறை தீர்க்க இயலும்.

உடலுறவில் திருப்தியின்மை:

பாலுறவில் ஏற்படும் நிறைவின்மையும் திருமண முறிவுக்குக் காரணமாக அமைகின்றது. மணவாழ்வில் நுழையும் ஆண் பெண்
இருபாலரும் தாம்பத்யத்தின நுட்பங்களையும் விஞ்ஞானப் பூர்வமாக உணர்ந்து கொண்டால்தான் மணவாழ்வு இனிக்கும்.

பெண்களில் சிலருக்குப் பிறவியிலேயே யோனிக் குழாய் தடுப்பு தசை தாம்பத்திய உறவுக்குத் தடையாக இருக்கக் கூடும்.
இக்குறையை அறுவை சிகிச்சை மூலம் நீக்கலாம்.

நெருங்கிய உறவில் திருமணம் வேண்டாம்:

நெருங்கிய உறவினர்களிடையே நடக்கும் திருமணத்தின் மூலம் தம்பதிக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல், மனம், அறிவுத்திறன்
ஆகியவற்றில் குறைவு ஏற்படுகிறது.

ரத்தம் உறையாத நோய், நிறக்குருடு, குருத்தெலும்பு குன்றிய குள்ளம், புத்தி மந்தம், சிறிய தலையுள்ள குழந்தை, பிறவி காது கேளாமை,
வலிப்பு நோய், ஒவ்வாமை போன்ற நோய்கள் மரபுக் கூறுகள் மூலம் பெற்றோரிடம் இருந்து குழந்தைக்கு வர வாய்ப்புள்ளது.

பெற்றோரில் யாரேனும் ஒருவரின் உடலில் குறைபாடுள்ள மாறுபட்ட மரபு கூறுகள் அமைந்தால் பிறக்கும் குழந்தைகள் அல்லது பேரக்குழந்தைகளுக்கு ஊனம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் கருச்சிதைவு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் நெருங்கிய உறவில் செய்யப்படும் திருமணங்கள் மூலமே
ஏற்படுகிறது.

பாலியல் கல்வி:

அளவுக்கு மீறிய கட்டுப்பாட்டில் பெண்கள் வளரும்போது திருமணத்திற்குப் பின், இயற்கையான தாம்பத்திய உறவை குற்ற
உணர்வாகக் கருத வாய்ப்புள்ளது. இதே போன்று சுய இன்பம் காணும் பழக்கமுள்ள ஆண்களுக்கும் இத்தகைய குற்ற உணர்வுமன ரீதியாக ஏற்படுகிறது. இதனால் உடலுறவில் திருப்தி அடையாத நிலைஏற்படக்கூடும். இத்தகைய தேவையற்ற அச்சங்களை
இருபாலரும் தவிர்க்க வேண்டும்.

எனவே பருவமைடைந்த இருபாலருக்கும் பாலியல் கல்வியைக் கற்பிப்பது மிகவும் அவசியம். பாலியல் உணர்வுகளை அறிவுத் திறன் கொண்டு பாதுகாக்க பாலியல் கல்வி பற்றிய விழிப்புணர்வும் வேண்டும். ஆக, செக்ஸ் என்ற வார்த்தையே கெட்டது அல்ல. ஒழுக்கத்துடனும் இல்லற வாழ்வை நடத்துவன் மூலமே நிலையான இன்பம் கிடைக்கும்.


அனுப்பியவர் முருகன்
source http://www.tamizharuvi.com

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...