செக்ஸ் நோய்க்கு பேஸ்புக்கும் முக்கிய காரணம்



லண்டன்: இங்கிலாந்தில் செக்ஸ் தொடர்பான நோய்களிந் அதிகரிப்புக்கு ஃபேஸ்புக் முக்கியக் காரணமாக திகழ்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

செக்ஸ் நோய்கள் அங்கு நான்கு மடங்கு அதிகரித்து விட்டதாம். இதற்கு ஃபேஸ்புக்தான் காரணமாக இருப்பதாக அந்த ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.

இங்கிலாந்தில் சிபிலிஸ் நோயின் தாக்குதல் கடந்த காலங்களை விட தற்போது நான்கு மடங்கு அதிகரித்து விட்டதாம். இதற்கு முன்பின் அறியாதவர்களுடன் ஃபேஸ்புக் மூலம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு செக்ஸ் உறவு கொள்வதுதான் காரணம் என்கிறது அந்த ஆய்வு.

இதுகுறித்து ஆய்வை நடத்திய பொது சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் பீட்டர் கெல்லி கூறுகையில், சிபிலிஸ் நோயின் தாக்குதல் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. ஏராளமான இளம் பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள், இணையதளங்கள் மூலம் குறிப்பாக ஃபேஸ்புக் மூலம் அறிமுகம் இல்லாதவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு செக்ஸ் உறவு வைத்திருப்பதாக கூறியுள்ளனர்.

சோஷியல் நெட்வொர்க்கிங் இணையதளங்கள், சம்பந்தமே இல்லாதவர்களைக் கூட எளிதில் தொடர்பு கொள்ள வைக்க உதவுகிறது. இது செக்ஸ் நோய்களின் அதிகரிப்புக்குக் காரணமாக விடுகிறது.

20 ஆண்டுகளுக்கு முன்புதான் சிபிலிஸ் நோய் மிகப் பெரிய வியாதியாக இருந்தது. அப்போது ஆணுறையை அதிகம் பேர் பயன்படுத்தியதில்லை. ஆனால் இப்போது ஆணுறை குறித்த விழிப்புணர்வு அதிகம் உள்ள இந்தக் காலகட்டத்திலும் சிபிலிஸ் வேகமாகப் பரவுவது வியப்பாக உள்ளது.

பெண்களில் 20 முதல் 24 வயதுக்குட்பட்டோருக்குத்தான் சிபிலிஸ் அதிகம் தாக்கியுள்ளது. ஆண்களைப் பொறுத்தவரை 25 முதல் 34 வயது வரையிலானோரே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்டர்நெட் மூலம் அறிமுகமாகும் பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்து விட வேண்டும் என்று பெரும்பாலான ஆண்கள் நினைக்கிறார்கள். இவர்களைப் போன்றோருக்கு ஃபேஸ்புக் மிகப் பெரிய வடிகாலாக உள்ளது என்றார் கெல்லி.

இந்த பரபரப்பு ஆய்வு குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் இதுவரை விளக்கம் தரவில்லை.



நன்றி http://thatstamil.oneindia.in

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...