அட நெசமாலுமே நாகரிகம் டெவலப் ஆய்ட்டு வருது தான்...தாவணி கலாச்சாரம் எல்லாம் போன தலைமுறை உடை ஆய்டுச்சு.. மசக்கலி,ரசக்கலி..காலத்தில் இருக்கிறோம் )) .ஜீன்ஸ் கூட அநேகமா ஓல்ட் பேஷன் ஆய்ட்டு வருதுன்னு நினைக்கிறேன்...ஓகே..ஓகே..எதுக்
சமீபத்தில்,ஓர் அதிகாலையில் என் சென்னை நோக்கிய பயணத்தில்...மாமண்டூரில் இருந்து ஒரு 30 கி.மீ க்கு முன்னாடி ஓர் அழகான வயல்வெளி.....அப்போ தான் ஒரு சுவாரஸ்யம்...அங்கே காதில் தண்டட்டி போட்ட அப்பத்தாக்கள் அழகான நைட்டி உடையில் வயக்காட்டில் களை பிடிங்கிட்டு இருந்தாங்க...பார்த்துட்டு சட்டுன்னு சிரிச்சுட்டேன்.. )))
"கோடாலி கொண்ட போட்ட..
கண்டாங்கி சேல பாட்டி!!
எவ்வுடை தரித்தாலும்
நீ அழகு சீமாட்டி!!
உனக்கு ரொம்ப
அழகா இருக்கே நைட்டி!!"))
போகும் வழியில் செம மழை..கொஞ்சம் ஒதுங்கி தேநீர் குடித்தோம்..அப்போது ஒரு குட்டிப்பையன் அங்கே நிறுத்தபட்டிருந்த பைக் கின் முன் சக்கரத்து டயர் மேலே ரொம்ப சீரியஸ்ஸாய் சிறுநீர் போய்கிட்டு இருந்தான்..ஏன் டயர் மேலே இருந்தன்னு அவனை கூப்பிட்டு கேட்டேன்..
அவன் சீரியஸ் ஆ இப்படி பதில் சொன்னான் "டயர் மேலே ரொம்ப சகதி..அதை கழுவினேன்க்கா.."
"நான் குடித்த
தேநீர் ருசியை விட
உன்
சிறுநீர்
சீர்திருத்தம்
அருமை!!" )))
தீபாவளி முடிஞ்சபிறகு பட்டாசு வெடித்த வெறும் காகித குவியல்களை பார்த்தால்,மனசில் ஒரு நொடி இதெல்லாம் பணம் தானே ன்னு தோணி மறையும்...
இந்த வாட்டி எங்க பக்கத்து ஏரியா வில் ஆந்திராவில் இருந்து கட்டிட தொழிலாளர்கள் குடும்பத்தோட வந்து டென்ட் போட்டு வேலை செஞ்சுட்டு இருக்காங்க தனியார் காண்ட்ராக்ட் தினக்கூலி ஆட்களாய்!!
ஏக்கமாய் வந்து பார்த்து போகும் அந்த சிறுவர்கள் உடை,இனிப்பு எதையும் விரும்பவில்லை..கொஞ்சம் பட்டாசு கொடுத்தோம். அவ்வளவு சந்தோஷம் அவங்களுக்கு..
அவங்க இருந்த டென்ட் பக்கம் நாங்க கொடுத்த பட்டாசு போட்டுகிட்டு இருந்ததை பார்க்கும்பொழுது...ம்ம்...என்
"வெடித்துச் சிதறிய
ஒவ்வொரு காகிதத்திலும்-உன்
பட்டாசு சிரிப்பு!
அழகே! உன்னைச் சுற்றி நான்!!"
எழுதியவர்
ஆனந்தி..
வலைப்பூ ( http://ananthi5.blogspot.com)
0 comments:
Post a Comment