வணக்கம் நண்பர்களே..! முந்தைய இடுகையில் அஆஇ (அலைபேசியின் ஆபத்துகளும், இடர்களும்) பற்றி பார்த்தோம். இப்பதில் அவற்றின் அவசியம் குறித்தும், அவற்றின் மூலம் நம் மக்கள் செய்யும் அட்டகாசங்கள் குறித்தும் யாமறிந்தவரை பகிர்கிறேன். அதற்கு முன்பாக அலைபேசியின் முக்கிய அவசியங்களை காண்போம். (ஃக்கி...ஃக்கி.. உங்களுக்கு தெரியாததா...????!!!!!)
அலை(கொலை)பேசியின் அவசியம்.-
நமது வருகை குறித்து தெரிவிக்கவும், காலதாமதம் ஏற்பட்டால் அறிவிக்கவும், தவறிய அழைப்பு செய்ய (இது பெரும்பாலும் இளம்வயது பெண்கள் செய்கிறார்கள்) முக்கியமான செய்தி பேச, உரையாட, தகவல் பரிமாற, பொழுது போக்க, படம் பார்க்க, பாட்டு கேட்க, கடலைபோட, மொக்கைபோட, கூட்டஅழைப்பில் அரட்டை அடிக்க அல்லது கும்மியடிக்க, மற்றும் குறுஞ்செய்தியில் அரட்டை அடிக்க, மின்னஞ்சல் பாரக்க, சமூக வலைதளங்களில் கருத்துப்பகிர, வலைப்பக்கம் எழுத, என்று இப்படி அவரவர்தேவைக்கேற்ப சொல்லிக் கொண்டே போகலாம்... மேலும் இதுகுறித்து ஒரு பெரிய்ய்ய...... பதிவே போடலாம். (அதுக்கு நிறைய பேர் இருக்காங்க. அதனால அதைநான் விட்டுட்டுட்டேன்)
பெரும்பான்மையான குறுஞ்(அறுவை) செய்திகள்.-
அலைபேசிகள் குறுஞ்செய்திகளை பகிர்வதில் (ம) பரிமாறுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணத்திற்கு ஒரு சில.. இந்தியா முழுவதும் சுற்றிவிட்டு மீண்டும் நமக்கே வரும் அம்மா கவிதை, காதல் கவிதை, நட்பு கவிதை, கருவறை கவிதை, கல்லரை கவிதை,........
தயவு செய்து உதவுங்கள். உயர்காக்க இரத்தம் கொடுத்து உதவுங்கள், இதயஅறுவை சிகிச்சைக்கு ரூபாய் ஐந்து இலட்சம் தேவை, (பெரும்பாலும் போலியானவை) உங்களை எனக்கு முன்பின் தெரியாது. இதை 20 பேருக்கு முன்அனுப்புங்கள் எனக்கு ஒரு குறுஞ்செய்திக்கு 10 பைசா கிடைக்கும்,
இன்று இரவுக்குள் 25 பேருக்கு இந்த குறுஞ்செய்தியை முன்அனுப்புங்கள் விரைவில் நல்ல செய்தி வரும். இல்லாவிட்டால் உங்கள் ப்ரியமானவர் உங்களை விட்டு பிரிந்திடுவார். அனுப்பினால் உங்களை கடவுள் காப்பாற்றுவார்.. (பெரும்பாலும் ஆங்கிலத்திலே வரும்.)
இது போன்று ஒரு ஐந்தாறு வகையான குறுஞ்செய்தி உள்ளது. நான் அலைபேசி வாங்கிய நாள்முதல் இப்படித்தான் வந்து தொலைகிறது. நானும் அதில் ஒரு சில ரசித்தவைகள் மற்றும் பிடித்தவைகளை மட்டும் நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களை தொல்லைப்படுத்துவதுண்டு. என்னன்வோ எழுத வந்து உருப்படியா எதுவும் சொல்லாமல் நேரத்தை வீணாக்கிட்டேன். (சரி பதிவுனு எழிதினால் ஒரு சில மொக்கைகள் வரத்தானே செய்யும்.) க்கி..ஃக்கி.. மீண்டும் வருவேன். அடுத்த பதிவில் இதன் தொடர்ச்சியாக ஒரு சமூக கருத்துடன் பகிர்கிறேன்.
முக்கிய குறிப்பு.-
இப்பதிவில் முடிந்தவரையில் தூயதமிழில் எழுத முயற்சித்திருக்கிறேன். (இணைக்கப்பட்டுள்ள படத்தை தவிர) ஏதாவது கலப்பு தமிழ் இருந்தால் தெரிவித்து, அதற்கு சரியான செந்தமிழை குறித்துக் காட்டவும். பதிவில் திருத்தி்க் கொள்கிறேன்.
எழுதியவர்
பிரவின்குமார்
சொல்லும்படியாக ஒன்றுமில்லை என்றாலும், சொல்லிக்கொள்ள விரும்புவது தமிழ்பற்றுள்ள தமிழர்களில் ஒருவன்.
வலைப்பூ ( http://dpraveen03.blogspot.com )
0 comments:
Post a Comment