எங்கே போய் முன்தோன்றிய மூத்த குடியாவது தமிழன்




நொரண்டு : காந்தியடிகள் தமிழ் கற்றாரா ? ...

நண்டு : ....


நொரண்டு : திருக்குறளை கற்பதற்காக ....

நண்டு : .....

நொரண்டு : ஏன் அமைதியா இருக்க .???

நண்டு : ....

நொரண்டு : சரி அது இருக்கட்டும் . திருக்குறளை அதன் உண்மையை
தமிழ் கற்றால் தான் அறிந்துகொள்ள முடியுமா ? . மொழி்பெயர்ப்பு அதனை வெளிப்படுத்தாதா ?

நண்டு :ஆம் . அதிக கலைச்சொற்களை பயிலுதல் அதிக ஆழத்திற்கு இட்டுச்சொல்லும் . மொழிபெயர்ப்பு ....

நொரண்டு : ஏன் ?

நண்டு : நான் மொழிபெயர்ப்பில் குறளை படித்ததில்லை .யாரவது தங்களின் மொழியில் குறளைப்படித்து பின் தமிழ் கற்று குறள் படித்தவரிடம் கேட்க வேண்டிய கேள்வி .

நொரண்டு : ...

நண்டு :ஆனால் தமிழில் கற்பது பற்றி வள்ளுவர் என்ன கூறியுள்ளார் தெரியுமா?

நொரண்டு : கூறு .

நண்டு :

''அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.''

என்ற குறளில்
தமிழ் தான் முன்தோன்றிய மொழி என்று கூறுவதன் மூலம்
அதனை கற்றபது தான் சிறப்பு என கூறுகின்றார் .

நொரண்டு : ...


நண்டு :மேலும் ,

''வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் தமிழ்தம் என்றுணரற் பாற்று.''

என்ற குறளின் மூலம்
தமிழ் கற்பதனால் உண்டாகும் பயனை கூறுகின்றார் .

நொரண்டு : என்ன பயன் ?

நண்டு :
தமிழ் , கற்றவருக்கு மழைபோல்
அனைத்தையும் கொடுக்கும் என்கின்றார் .

நொரண்டு : ... இப்படியும் கூறியுள்ளாரா !!!


நண்டு :மேலும் ,

''தமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ். ''

என்ற குறளின் மூலம் ...

நொரண்டு : இதுக்கு





என்றும் ...


நண்டு : சொல்லவருவதை சொல் .

நொரண்டு : அது வந்து
நான் பாத்த புத்தகத்திலெல்லாம்
''அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்'' னு போட்டுருக்கு
நீ
''தமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்'' னு
எடுத்திருக்க...

நண்டு :
அவர்கள் பார்வையே தவறு .திருவள்ளுவர் காலத்தில் சுத்தத்தமிழ் பயன்படுத்திவந்த பொழுது அமிழ்து என்பது ....பின்னாள் சேர்த்துக்கொண்ட ஒரு சொல் . சுருங்கக்கூறின் திருவள்ளுவர் காலம் தனித்தமிழ் காலம் . தனித்தமிழன் காலம் .


நொரண்டு : ...அப்படியா ..

நண்டு :
பின்னாள் சேர்த்தவர்கள் .அமிழ்து என்பது தமிழுக்கு முன்பு தோன்றியதுபோல் ஆக்கி . தமிழை பின்னுக்கு தள்ளினர் .அந்த ஒரு வார்த்தையைக்கொண்டே தமிழை கேவலப்படுத்திவிட்டனர் தமிழை ,தமிழனை ,தமிழ் பண்பாட்டை .அமிழ்து ,அமிழ்து,அமிழ்து ...என்று சொல்லிக்கொண்டே வந்தால் தமிழ் என வருமென்றும் சொல்லி ஏமாற்றியதோடு . தமிழ் இனத்தையே மடையர்களாக்குவதற்கு இலக்கியத்திலும் இதே கருத்தை புகுத்தி விளையாடிவிட்டனர் . எங்கும் . நீ அமிழ்தை ஏற்றுக்கொண்டால் தேவர்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் . தேவர்களை ஏற்றுக்கொண்டால் அவர்களின் அடிவருடிகளை உமக்கு முன்னவர்களாக ஏற்றுக்கொண்டுவிட்டாய் அவ்வளவே . இவ்வாறு ஒவ்வொன்றாய் ஏற்றுக்கொண்டு... எங்கே போய் முன் தோன்றிய மூத்த குடியாவது தமிழன். தெரிகின்றதா கபட நாடகம் .

நொரண்டு : அட ...

நண்டு :
ஆனால் ,இடைச்செருகலுக்கு் குறள் மட்டும் மிகவும் கடினமாக இருந்ததால் மிகவும் கடினப்பட்டே ;ஆனால் ; அமைப்பை உடைக்கும் திறனற்று .அதனால் தான் இப்பொழுது நம்மால் எளிதில் அதனை அடையாளம் காணமுடிகிறது .குறளின் சிறப்பே இது தான் .இப்படியொல்லாம் நடக்கும் என நினைத்துத்தான் என்னவோ வள்ளுவர் குறள் வடிவத்தில் இயற்றினார் போலும் .

நொரண்டு : சரி ஏன் இத்தனை பீடிகை...குறளுக்கு விளக்கம் சொல் .

நண்டு :
தமிழ்தினும்
மிகவும் இனிமையான மகிழ்வைத்தரும்
தம் மக்கள் அதாவது தம் குழந்தைகள்
இட்டும் ,தொட்டும் ,துழந்தும்
சிறு கையாள் அளாவப்பட்டு
குழைந்து எழு்தும் தமிழை பார்க்கும் பொழுது .

நொரண்டு : மழலை எழுத்தை கூழ் என்கின்றார் .

நண்டு :ஆம்

நொரண்டு : மழையை தமிழ் என்கின்றார்

நண்டு :ஆம்

நொரண்டு :
இன்னைக்கு குழந்தைகள் தினம் ,
இது குழந்தைகளுக்கான குறள் .
ஆகா..ஆகா



எழுதியவர்
வழக்கறிஞர் இராஜசேகரன்
வலைப்பூ (http://nanduonorandu.blogspot.com)

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...