கசாப்புக்கு வயது கண்டறியும் சோதனை!


கசாப்புக்கு வயது கண்டறியும் சோதனை!

Link to இந்நேரம்.காம்

கசாப்புக்கு வயது கண்டறியும் சோதனை!

Posted: 14 Dec 2010 09:28 PM PST

2008 ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலில் அஜ்மல் கசாப்புக்கு தனிநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்வதற்கான வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் வளர்ச்சியை சீனா வாய்ப்பாகவே கருதுகிறது - சீனா

Posted: 14 Dec 2010 09:32 PM PST

சீனப் பிரதமர் வென் ஜியாபோ 3 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்வதயொட்டி, சீன அயலுறவுத் துறை உதவி அமைச்சர் ஹூ ஜென்குவே பீஜிங்கில் செவ்வாய்க் கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்தியாவுடன் விவாதிப்பதிலிருந்து எந்த ஒரு பிரச்சனையையும் நாங்கள் விலக்கி வைக்கவில்லை., விசா வழங்குவது போன்ற பிரச்சனைகளில் சம்பந்தப்பட்ட இருநாடுகளிடையேயான அதிகாரிகள் பேசுவார்கள் என்று கூறினார்.

போலி ரேசன்கார்டு பட்டியலில் புதுச்சேரி எம்.எல்.ஏ பெயர்

Posted: 14 Dec 2010 09:38 PM PST

புதுச்சேரி- ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜாராமன், கரிகாலம்பாக்கம் சுபாஷ் நகரிலுள்ள வீட்டில் வசித்து வருகிறார். அங்குள்ள ரேஷன் கடையில், போலி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பட்டியலில் தொகுதி எம்.எல்.ஏ பெயரும் இருந்ததை அவரது மகன் தற்செயலாகப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து தனது தந்தைக்கு தெரிவித்தார்.

நக்கீரன் காமராஜ் மற்றும் ஜெகத் கஸ்பர் அலுவலகத்திலும் சி.பி.ஐ அதிரடி சோதனை!

Posted: 14 Dec 2010 10:43 PM PST

2G ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் அண்மையில் சி.பி.ஐ அதிரடி சோதனை நடத்தியது.
அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் சி.பி.ஐ அதிகாரிகள் டெல்லியில் 7 இடங்கள் உட்பட 34 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நீரா ராடியாவின் வீடு மற்றும் அலுவலகம், முன்னாள் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத் தலைவர் பிரதீப் பைஜாலின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பிரபல வாரமிருமுறை இதழான நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ் இல்லத்திலும், பேராயர் ஜெகத் கஸ்பரின் அலுவலகத்திலும் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ராசாவின் ஆடிட்டர் கணபதி சுப்பிரமணியன் வீட்டிலும் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
பிரபல இதழின் இணை ஆசிரியர் வீட்டில் சி.பி.ஐ சோதனை நடத்தி வருவது பொதுமக்களுக்கு ஊடகங்கள் மீது அதிர்ச்சியையும்  சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
2G ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் அண்மையில் சி.பி.ஐ அதிரடி சோதனை நடத்தியது.

தப்பியோடிய இலங்கை ராணுவ வீரர்களைத் தேடும் பணி தீவிரம்

Posted: 15 Dec 2010 12:09 AM PST

ஈழப்போர் உச்சகட்டத்திலிருந்தபோது விடுதலைப் புலிகளின் தீவிர தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் அரசுப் படையணியிலிருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை ராணுவ வீரர்கள் (?)  இன்றுவரை தலைமறைவாக வாழ்ந்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

அம்பானியை ஓரம்கட்டிய விஜய் மல்லையா - கூகுல்

Posted: 15 Dec 2010 12:16 AM PST

2010ஆம் ஆண்டில் கூகுள் தேடுபொறியில் அதிகம் தேடப்பட்ட தொழிலதிபராக விஜய் மல்லையா விளங்குவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கூகுள் இந்தியா நிறுவன உயர் அதிகாரி வினய் கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 2010ம் ஆண்டில், கூகுள் சர்ச் இஞ்ஜினில் அதிகமாக தேடப்பட்டவர்கள் பட்டியலில் தொழிலதிபர் விஜய் மல்லையா அம்பானி சகோதரர்களை நான்காவது, ஐந்தாவது இடத்திற்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்திருப்பதாகத் தெரிவித்தார்.

ராஜாத்தி அம்மாள் ஆடிட்டர் வீட்டில் சிபிஐ சோதனை.

Posted: 15 Dec 2010 03:45 AM PST

டில்லியில் இருந்து வந்‌த மத்தியப் புலணாய்வுத் துறை (CBI) அதிகாரிகள் 150 பேர் கொண்‌ட குழு இன்று தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் பெரம்பலூர் உள்ளிட்ட 27 இடங்களில் சோதனை செய்து வருகிறது. நக்கீரன் வார இதழ் இணை ஆசிரியர் காமராஜ் வீட்டிலும் நுங்கம்பாக்கம், காதர்நவாஸ்கான் ரோட்டில் இருக்கும் டிராய் முன்னாள் இயக்குநர் வீட்டிலும் சோதனை நடை‌பெறுகிறது.

சமச்சீர் கல்வி திட்டத்தில் சிறுபான்மை மொழிகளுக்கு ஒதுக்கீடு

Posted: 15 Dec 2010 05:23 AM PST

தமிழகத்தில் 2010-2011 கல்வியாண்டில் சமச்சீர்க் கல்வி பாடத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சிறுபான்மை மொழிச் சங்கங்களிலிருந்து சில கோரிக்கைகள் பெறப்பட்டது. கடந்த 11.12.2010 அன்று சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டிலும் அக்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநாட்டில் உரையாற்றுகையில் பள்ளிக்கல்வித் துறையில் சமச்சீர்க் கல்வி பாடத் திட்டத்தில் சிறுபான்மையினர் மொழிகள் கற்பித்தல் தொடர்பான கோரிக்கைமீது உரிய நடவடிக்கைகளை தமிழகஅரசு மேற்கொள்ளும் என்று அறிவித்தார்

டொயட்டோ-எடியோஸ் கார் முன்பதிவு தொடக்கம்

Posted: 15 Dec 2010 05:28 AM PST

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் டொயோட்டா (ஜப்பான்) தனது புதியவகை எடியோஸ் கார் தயாரிப்பை இந்தியாவில் இந்த வாரம் துவங்குகிறது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வரும் ஜனவரியில் டெலிவரி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

க்ராஃபிக்ஸ் பயிற்சி - Selections - combining

Posted: 15 Dec 2010 07:14 AM PST

க்ராஃபிக்ஸ் பயிற்சி - Selections - combining


Selection Tool களில் மூன்று அடிப்படை மற்றும் அதனுள்
அடங்கியுள்ள ஏனைய Toolஇல் எதையாவது ஒன்றை நாம் தேர்வு செய்யும்போது Options Bar ல் படம் 9_1 ல் காண்பதை கவனித்திருப்பீர்கள். இந்த வசதி மூலமாக நம்முடைய Selection களை Combine செய்ய இலகுவாக அமையும்.

தமிழகப் பள்ளிகளில் அரபிக், உருது மொழிப்பாடங்கள்!

Posted: 15 Dec 2010 11:57 AM PST

சென்னை: தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான பாடநூல்கள், தேர்வுகள், மற்றும் சான்றிதழ்களில் மதிப்பெண்கள் வழங்குவதை நடைமுறைப்படுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சிங், சிதம்பரம், கருணாநிதியை கொல்ல புலிகள் திட்டம்! உளவுத்துறை எச்சரிக்கை

Posted: 15 Dec 2010 12:29 PM PST

புதுடில்லி: தமிழகத்தில் நடைபெறவிருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப்போகும் பிரதமர் மன்மோகன் சிங் மீது தாக்குதல் நடத்த இலங்கை விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது.

நீரா ராடியா வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ அதிரடி சோதனை

Posted: 14 Dec 2010 09:23 PM PST

2ஜி அலைக்கற்றை விவகார‌ம் தொட‌ர்பாக நீரா ராடியா, தொலை‌த்தொட‌‌ர்பு ஒழு‌ங்குமுறை ஆணைய‌ மு‌ன்னா‌ள் தலைவ‌‌ரி‌ன் ‌வீடு, அலுவலக‌ங்க‌ள் உ‌ள்பட 34 இட‌ங்க‌ளி‌ல் ‌சி.‌பி.ஐ அ‌திகா‌ரிக‌ள் அ‌திரடி சோதனை மே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

மாவட்டத் தலைவர்களுடன் ஜெயலலிதா திடீர் ஆலோசனை

Posted: 15 Dec 2010 12:36 AM PST

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமது கட்சியின் குறிப்பிட்ட மாவட்டச் செயலாளர்களுடன் அவரது சென்னை வீட்டில் திடீர் ஆலோசனை நடத்தினார். சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்காக ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், மாவட்டங்களில் கட்சி அமைப்புகளில் நிலவும் பிரச்னைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே பூமியில் விரிசல்

Posted: 15 Dec 2010 12:51 AM PST

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே பரளியாற்று கரையோரத்தில் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. விரிசல் ஏற்பட்ட பகுதியிலுள்ள மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும்பீதி நிலவுகிறது.

ரூ.15 கோடியில் 7 நவீன மகப்பேறு மருத்துவமனைகள்

Posted: 15 Dec 2010 01:09 AM PST

சென்னை மாநகராட்சி சார்பில் புளியந்தோப்பு, திருவேங்கடம் சாலையில் உருவாகும் 24 மணிநேர நவீன மகப்பேறு மருத்துவமனை கட்டும்பணியை மேயர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மாநகராட்சி சார்பில் 10 மண்டலங்களிலும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்காக 24 மணி நேர மகப்பேறு மருத்துவ மனைகள் கட்டப்பட்டு வருகின்றன. அயனாவரத்தில் யுனைடட் இந்தியா நகரில் ரூ.1 கோடியே 34 லட்சம் செலவில் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் ரூபாய்களை வெளியிட RBI திட்டம்

Posted: 15 Dec 2010 05:18 AM PST

கள்ள பணப் புழக்கத்தை தடுக்கவும், ரூபாயின் பயன்பாட்டுக் காலத்தை நீட்டிக்கவும் பிளாஸ்டிக்கிலான ரூபாயை அச்சடித்து வெளியிடுவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக இந்திய மைய வங்கி (RBI) ஆளுநர் சுப்பா ராவ் கூறியுள்ளார்.

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...