ஏ.டி.எம். மெஷின் மூலம் தங்க கட்டிகள் விற்பனை தொடங்கியது! Posted: 18 Dec 2010 01:22 PM PST அமெரிக்காவின் புளோரிடா மாநில ஷாப்பிங் மால் ஒன்றில் ஏ.டி.எம். இயந்திரம் மூலம் தங்க கட்டிகள் விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணத்துக்கு ஏற்ப 24 காரட் தங்கத்தை பிஸ்கட்டாகவோ நாணய வடிவிலேயோ இயந்திரம் வழங்கும். ஜெர்மனியை சேர்ந்த தாமஸ் கெய்ஸ்லர் என்பவர் இந்த இயந்திரத்தை வடிவமைத்துள்ளார்.
|
விக்கிலீக்ஸ்: கருணாவும் டக்ளஸூம் தமிழ்ப்பெண்களை கடத்தி விற்றனர்! Posted: 18 Dec 2010 01:07 PM PST கொழும்பு: இலங்கையில் விடுதலை புலிகளுக்கும் இலங்கை ராணுவத்தினருக்கும் நடைபெற்ற சண்டயின்போது அகதிகளாக வந்த பல தமிழ்ப் பெண்களை டக்ளஸ் தேவானந்தாவும், கருணாவும் கடத்தி விற்றதாக விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
|
குண்டு வெடிப்புக் குற்றவாளியைக் கொலை செய்த 3 ஆர்.எஸ்.எஸ்.ஸினர் கைது! Posted: 18 Dec 2010 01:00 PM PST அஜ்மீர் தர்கா மற்றும் ஹைதராபாத் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சுனில் ஜோஷி என்பவரைக் கொலை செய்ததாக ஹர்ஷத் சோலங்கி உள்ளிட்ட மூன்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரை கைது செய்துள்ளதாக ராஜஸ்தான் மாநில காவல்துறை கூறியுள்ளது.
 |
அயோத்தி: அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்ப எதிர்த்து இந்து மகாசபை அப்பீல்! Posted: 18 Dec 2010 12:58 PM PST அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய பாபர் மசூதி - ராமர் ஜென்ம பூமி விவகாரத்தில் நிலத்தின் உரிமை குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இந்து மகாசபை முடிவு செய்துள்ளது.
 |
ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவு! விமான சேவைகள் முடங்கின Posted: 18 Dec 2010 12:50 PM PST ஐரோப்பிய நாடுகளில் தற்போது குளிர்காலம் என்பதால் ஜெர்மனி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சாலை போக்குவரத்தும் விமான போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
|
2ஜி: சிபிஐ விசாரணையை சந்திக்கத் தயார் - அருண்ஷோரி! Posted: 18 Dec 2010 12:23 PM PST 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணையை எதிர்கொள்ளத் தாம் தயாராக இருப்பதாக பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான அருண்ஷோரி கூறியுள்ளார்.
 |
ஸ்டெம்செல் சிகிச்சை மூலம் வழுக்கைத் தலையில் முடி! Posted: 18 Dec 2010 11:35 AM PST அடுத்த சில ஆண்டுகளில் ஸ்டெம்செல் சிகிச்சை மூலம் வழுக்கைத் தலையில் முடி வளர வைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
|
தென் ஆப்ரிக்கா ரன் குவிப்பு - 4விக்கெட் இழப்பிற்கு 620 ரன்கள் Posted: 18 Dec 2010 05:31 AM PST சென்டுரியன் (தென் ஆப்ரிக்கா):தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணிக்கெதிரான, தனது முதல் டெஸ்ட் போட்டியில், தென் ஆப்ரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 620 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தென் ஆப்ரிக்கா அணியின் ஹாஸிம் அம்லா, எபி டிவில்லர்ஸ் சதமடித்ததும், மூத்த வீரர் ஜாக் கல்லீஸ் இரட்டை சதமடித்ததும் இன்றைய ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். 
|
உலக கோப்பை கிரிக்கெட் - உத்தேச அணியில் திராவிட் இல்லை Posted: 18 Dec 2010 05:12 AM PST மும்பை: எதிர்வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான உத்தேச கிரிக்கெட் அணி வீரர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அனுபவ வீரரும், முன்னாள் கேப்டனுமான ராகுல் திராவிட் மற்றும் இர்பான் பதான் சேர்க்கப்படவில்லை. 
|
விக்கிலீக்ஸ்: பயங்கரவாதத்தின் மீது இந்திய முஸ்லிம்களுக்கு நம்பிக்கையில்லை! Posted: 18 Dec 2010 03:12 AM PST இந்திய முஸ்லிம்கள் பயங்கரவாதத்துக்கு துணை போவதில்லை; அவர்கள் தேசியத்திலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்காவின் ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 |
ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள் Posted: 18 Dec 2010 02:32 AM PST சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் சிப்காட் ஸ்டேட் பேங்கில் நுழைந்த ATM திருடர்கள் அங்கிருந்த காவலாளியைக்கட்டி போட்டுவிட்டு, ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி சென்றனர். அவர்களைப் பிந்தொடர்ந்து ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வந்ததால், போலீஸ் ரோந்துவாகனம் என்று பயந்து நடுரோட்டில் ATM எந்திரத்தை போட்டுவிட்டு தப்பியோடினர். இதனால் ரூ. 27 லட்சம் பணமும் ATM எந்திரமும் மீட்கப்பட்டது!
 |
ரூ.499 க்கு அளவில்லா அகலப்பட்டை இண்டெர்நெட் Posted: 18 Dec 2010 02:27 AM PST BSNL நிறுவனம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுச் சலுகையாக ரூ 499-க்கு அளவில்லா பிராட்பேண்ட் வசதியை வழங்குகிறது. இதுபற்றி BSNL பொதுமேலாளர் நடராஜன் கூறுகையில், "ஹோம்-625 என்ற திட்டத்தின்கீழ் அளவில்லா பிராட்பேண்ட் வசதி வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் 100 இலவச அழைப்புகளுடன் கூடிய கம்பிவழி டெலிபோன் வழங்கப்படுகிறது.
 |
ராகுல்காந்தி தமிழகம் வருகை Posted: 18 Dec 2010 02:23 AM PST பீகார் சட்டசபை தேர்தல் படுதோல்வி, 2G ஸ்பெக்ட்ரம் விவகாரம் போன்ற பிரச்சினைகளால் சோர்ந்து போயுள்ள கட்சித் தொண்டர்களை உற்சாகபபடுத்தி கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் எதிர்கால கூட்டணி குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்பட பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி தமிழகம் வருகிறார்.
 |
சசிகலாவுக்கு அ.இ.அ.தி.மு.கவில் புதிய பதவி Posted: 18 Dec 2010 02:14 AM PST ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்ளிட்ட 66 பெண்கள் அ.தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் டாக்டர் சரோஜா, சக்தி கோதண்டம், கலைச்செல்வி, டி. சகுந்தலா, திருப்பூர் விசாலாட்சி, சி.ஆர். சரஸ்வதி, கவுரி அசோகன், ராஜலட்சுமி, சசிகலா புஷ்பா, சாவித்திரி ஸ்ரீவீர ராகவன், சரஸ்வதி ரங்கசாமி, கணிதா சம்பத் ஆகியோரையும் ஜெயலலிதா நியமித்துள்ளார்.
 |
கருணாநிதி ஒரு கம்யூனிஸ்ட்? Posted: 18 Dec 2010 12:34 AM PST ஜீவாவைப் பற்றி எழுதுவதாகக் கடந்த வார அலசலில் சொல்லியிருந்தேன். கடந்த அலசலுக்கு வந்த பின்னூட்டங்கள் கருணாநிதியைத் தன்னலமற்ற தலைவர்களுடன் ஒப்பிட்டதைக் கண்டித்திருந்தன. நாட்டு நலனுக்குத் தம்மையே அர்ப்பணம் செய்த தலைவர்களுடன் ஒப்பிடும்போதுதான் கருணாநிதியின் தன்மையும் தகைமையும் பொதுமக்களுக்குத் தெளிவாகும் என்பதாலேயே அவ்விதம் ஒப்பிடப்பட்டது. எனவே இவ்வாரம் ஜீவாவின் வாழ்வில் இருந்து சில குறிப்புகளுடன் கருணாநிதியை ஒப்பிடும் தேவை ஏற்பட்டுள்ளது.
 |
மும்பையைப் பின்னுக்கு தள்ளி சென்னை சிறந்த நகரமாக தேர்வு! Posted: 17 Dec 2010 11:42 PM PST புதுடில்லியிலிருந்து செயல்படும் Institute for competetiveness வருடந்தோறும் இந்தியாவில் தொழில் துவங்க உகந்த நகரங்களின் தரவரிசை பட்டியலை வெளியிடும். அரசின் ஆதரவு, உள் கட்டமைப்பு, சாலை வசதி, மின்சார வசதி, படித்த மக்கள் என 800 வகையான கூறுகளை அடிப்படையாக கொண்டு இத்தர வரிசை வெளியிடப்படும். இவ்வாய்வில் இந்தியாவின் 50 நகரங்கள் ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.
 |
பார்வர்டு பிளாக் கட்சி தொண்டர்கள் 7 பேர் கடத்தி கொலை! Posted: 17 Dec 2010 09:48 PM PST மேற்கு வங்காள மாநிலத்தில் பார்வர்டு பிளாக் கட்சி தொண்டர்கள் 7 பேரை மாவோயிஸ்டுகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் கடத்திச்சென்று துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக தகவல்கள் கூறுகின்றன.
 |
ராகுல் கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம்! Posted: 17 Dec 2010 09:37 PM PST இந்து தீவிரவாதிகள் பற்றிய ராகுல் காந்தியின் கருத்து, இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு விழுந்த பலத்த அடி என்று பாரதீய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கடும் டில்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது-
 |
2ஜி : உச்ச நீதிமன்ற முடிவுக்கு ஜெயலலிதா வரவேற்பு! Posted: 17 Dec 2010 09:25 PM PST 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த சி.பி.ஐ.யின் விசாரணையை கண்காணிப்பது என்ற உச்ச நீதிமன்றத்தின் முடிவை வரவேற்பதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
 |
தயாநிதி மாறன் ரூ.600 கோடி கொடுத்தாரா? நிரூபிக்க தயாரா? சோவுக்கு கருணாநிதி சவால் Posted: 17 Dec 2010 09:18 PM PST "மந்திரி பதவிக்காக தயாளு அம்மாளுக்கு, தயாநிதி மாறன் ரூ.600 கோடி கொடுத்ததாக சொல்வதை நிரூபிக்க தயாரா'' என்று சோவுக்கு முதல்வர் கருணாநிதி சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 |
கருணாநிதியின் இரட்டைவேடம் : சீமான் தாக்கு! Posted: 17 Dec 2010 08:54 AM PST மருத்துவப் படிப்புக்கு நுழைவுத்தேர்வு விவகாரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 |
விக்கிலீக்ஸ்: லஷ்கரைவிட இந்து தீவிரவாதம் அபாயகரமானது! Posted: 16 Dec 2010 09:58 PM PST பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கங்களை விட இந்தியாவில் அதிகரித்து வரும் இந்து தீவிரவாத அமைப்புகளால்தான் இந்தியாவுக்கு பேராபத்து உள்ளது என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டிமோதி ரோமரிடம் ராகுல் காந்தி கூறியதாக விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.
 |
வி.ஏ.ஓ. தேர்வு தேதி அறிவிப்பு Posted: 16 Dec 2010 07:01 AM PST வி.ஏ.ஓ. (கிராம நிர்வாக அதிகாரி) பணியிடங்களுக்கான தேர்வுகள், பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
 |
அவதூறு பரப்பினால்... - ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை! Posted: 16 Dec 2010 04:38 AM PST சென்னையில் உள்ள நில மாற்றம் தொடர்பாக ராயல் நிறுவனம் குறித்து தவறான செய்தியை சில மீடியாக்கள் உள்நோக்கத்தோடு வெளியிட்டிருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், இதுபோன்று அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
 |
குடும்ப அட்டைகளில் புதிய பக்கங்கள் சேர்க்கப்படும் Posted: 16 Dec 2010 03:24 AM PST தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ள ஒரு கோடியே 96 லட்சம் குடும்ப அட்டைகளில் 20 லட்சம் போலி அட்டைகள் நீக்கப்பட்டுள்ளதோடு அடுத்த வருடம் 2011 டிசம்பர் வரை பயன்படுத்தும் வகையில் புதிய பக்கங்கள் சேர்க்கப்படும் என்று உணவு, கூட்டுறவு, நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் சுவரண்சிங் தெரிவித்துள்ளார்.
 |
மகள்களை விற்க முயன்ற தந்தை கைது Posted: 16 Dec 2010 03:16 AM PST வறுமையால் சொந்த மகள்களை விற்க முயன்ற தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் கருப்பூரை சேர்ந்தவர் சக்திவேல்-அலமேலு தம்பதியிருக்கு சந்தியா(12), லட்சுமி (9) ஆகிய மகள்கள் உள்ளனர். சக்திவேலுடன் அவரது சின்னம்மாள் சின்ன பொண்ணு (43) என்பவரும் வசித்து வருகிறார்.
 |
இயக்கத்தை வலுப்படுத்தும் முயற்சியில் விடுதலைப் புலிகள் - லத்திகா Posted: 16 Dec 2010 01:46 AM PST விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து மதிமுக தலைவர் வைகோ மேல்முறையீடு செய்துள்ள நிலையில் மத்திய உளவுப்பிரிவிலிருந்து தமிழக போலீசுக்கு எச்சரிக்கை ஒன்று வந்துள்ளது. அதில், பிரதமர் மன்மோகன்சிங், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, தமிழக முதலமைச்சர் கருணாநிதி, மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் உள்பட நாட்டின் சில முக்கிய தலைவர்களுக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.
 |
விரைவில் மலிவு விலை மருந்துகள் - மு.க.அழகிரி Posted: 16 Dec 2010 12:55 AM PST மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் விரைவில் மருந்துக்கொள்கை வகுக்கப்படும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்தார்.
 |
நீரா ராடியா ஓர் 'பொருளாதார பயங்கரவாதி' - படேல் Posted: 16 Dec 2010 12:24 AM PST 2G ஒதுக்கீடு ஊழலில் அரசியல் தரகராகச் செயல்பட்ட நீரா ராடியா ஒரு பொருளாதார பயங்கரவாதி என்று மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுல் படேல் தெரிவித்துள்ளார்.
 |
0 comments:
Post a Comment