உண்மையான அன்பு - நெகிழ்வூட்டும் சிறுகதை


உண்மையான அன்பு - நெகிழ்வூட்டும் சிறுகதை

Link to இந்நேரம்.காம்

உண்மையான அன்பு - நெகிழ்வூட்டும் சிறுகதை

Posted: 08 Nov 2010 08:26 AM PST

நவம்பர் மாத குளிர் நேரத்தில் அதிகாலை 7 மணிக்கு 80 வயது மதிக்கத்தக்க முதியவர் என்னை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்தார். தன் பெருவிரலில் உள்ள காயத்திற்காக போடப்பட்டிருந்த கட்டை அவிழ்த்து டிரெஸ்ஸிங் செய்வதற்காக வந்ததாக தெரிவித்தார் தனக்கு ஓர் முக்கிய அப்பாயிண்ட்மென்ட் 7.30 மணிக்கு உள்ளதால் விரைவில் சிகிச்சையளிக்கும் படி வேண்டினார்.

E-Publishingக்கு ஆள்கள் தேவை!

Posted: 09 Nov 2010 09:03 AM PST

சென்னை மவுண்ட் ரோடு மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய பகுதிகளில் பணியாற்ற ஆள்கள் தேவை. புதியவர்களும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அடிப்படை கணினி அறிவும் தட்டச்சும் தெரிந்தால் போதுமானது. மேலும் விவரம் வருமாறு:

புற்றுநோய் மருத்துவத்தில் புதிய முன்னேற்றம்

Posted: 10 Nov 2010 01:30 PM PST

புற்றுநோய் பெரும்பாலும் குணப்படுத்த இயலாத நோயாகவே உலகம் முழுதும் கருதப்படுகிறது.  புற்றுநோய்க்கிருமிகள் அதற்கான அழிப்புமருந்துகளினும் அதிக வீரியம் பெறுவது எப்படி என்பது ஆய்வாளர்களுக்கு புதிராக இருந்துவந்தது. இந்நிலையில் புற்றுநோயாளிகளைக் குணப்படுத்த புதிய வழிமுறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது

ஃபேஸ்புக் மின்னஞ்சல் சேவையைத் தொடங்குகிறது!

Posted: 14 Nov 2010 12:58 PM PST

முன்னணி சமூக இணையதளமான ஃபேஸ்புக் கூகிள் மற்றும் யாஹூ நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தன்னுடைய உபயோகிப்பாளர்களுக்கு இலவச மின்னஞ்சல் சேவையை வழங்க உள்ளது.

திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!

Posted: 16 Nov 2010 11:11 AM PST

2ஜி அலைக்கற்றை ஏலத்தில் நடைபெற்ற முறைகேடுகளுக்காக தி மு க வின் மத்திய தகவல் தொழிற்நுட்ப தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ராஜா பதவிவிலகிவிட்டாலும் இந்தப் பதவி விலகலுக்குப் பின்னிருக்கும் செய்திகள் சுவாரசியமானவை. இந்தப் பதவி விலகலுக்கு ஊடக அழுத்தங்களும்  ஒரு காரணமாக அமைந்தன எனில் மிகையாகாது.

விக்கிலீக்ஸ் அதிபரை கைது செய்ய நீதிமன்றம் ஒப்புதல்!

Posted: 20 Nov 2010 12:10 PM PST

பிரபல இணையதளமான விக்கிலீக்ஸ்' ன் நிறுவனரான ஜூலியன் அசேஞ்ஜ், மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக அவரை கைது செய்வதற்கான கோரிக்கைக்கு, ஸ்விட்சர்லாந்தின் ஸ்டாக்ஹோம் மாவட்ட நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளதால், அவர் விரைவில் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ராக்கிங் கொடுமை: மாணவர் உயிர் ஊசல்!

Posted: 20 Nov 2010 10:08 PM PST

துர்காபூர்: மேற்கு வங்கத்தின் பாங்குரா மாவட்டத்தின் துர்காபூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது பிஸ்னுபூர் மல்லபம் என்ற கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் அதே கல்லூரியில் பயிலும் மூன்றாமாண்டைச் சேர்ந்த இரண்டு மாணவர்களால் கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்டார். இதனால் அவர் கோமா நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றார்.

புதுவை ரங்கசாமி தனிக்கட்சி தொடங்க முடிவு?

Posted: 22 Nov 2010 11:21 AM PST

புதுச்சேரி: புதுவையில் தொடர்ந்து இரு முறை முதலமைச்சர் பதவி வகித்தவர் புதுவை காமராஜர் என்றழைக்கப்படும் முதல்வர் ரங்கசாமி. தனது கட்சி அமைச்சர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2008-ம் ஆண்டு பதவி விலகினார். இதன் பின் கட்சியின் எந்த நடவடிக்கையிலும் அவர் பங்கேற்பதில்லை. தேர்தல் பிரச்சாரத்துக்கும் வரவில்லை.

ஊழலுக்கு விலை போகும் ஊடகங்கள்!

Posted: 23 Nov 2010 11:46 AM PST

சண்டிகரில் இருந்து வெளியாகும் முக்கிய நாளிதழான ஜன்சட்டாவின் ஆசிரியர் ஓம் தன்விக்கு அதிகாலையில் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. தொலைபேசியில் அழைத்த நபர் தன்விக்கு சட்டிஸ்கரின் பிரதான இடத்தில் ஒரு வீட்டு மனையை இலவசமாகத் தருவதாகக் கூறுகிறார். இதனால் அதிர்ச்சியும் திகைப்பும் ஏற்பட்டாலும் அதை மறைத்தவாறு தன்வி நகைச்சுவையாக வீட்டுமனை கிடைத்தாலும் அதில் வீடு கட்ட தன்னிடம் பணம் இல்லையென்று கூறுகிறார். விடாப்பிடியாக அம்மனிதர் இரண்டு வீட்டுமனைகளைத் தருவதாகவும் ஒன்றை விற்று அதிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு வீடு கட்டிக் கொள்ளலாம் என்றும் கூறுகிறார்.

LIC வீட்டு வசதி ஊழல் - தலைமை நிர்வாகி கைது, சிபிஐ அதிரடி

Posted: 24 Nov 2010 06:43 AM PST

புது டில்லி: LIC வீட்டு வசதி நிதி முறைகேடு தொடர்பாக அந்நிறுவன தலைமை நிர்வாகி, இன்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மேலும் மூன்று அரசு வங்கி உயரதிகாரிகள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

தேர்தலில் NRIகள் வாக்களிக்கலாம்! வயலார் ரவி

Posted: 25 Nov 2010 03:01 AM PST

புது டெல்லி: வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், இந்தியாவில் நடக்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டசபைதேர்தல்களில் ஓட்டுப் போட வழிவகை செய்யும் மசோதா கடந்த மழை கால தொடரில் பாராளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

மனம் மகிழுங்கள்! - 24 : நன்னம்பிக்கை

Posted: 26 Nov 2010 06:43 AM PST

மனம் மகிழுங்கள்!

24 - நன்னம்பிக்கை

- நூருத்தீன்

யானையின் பலம் எதிலே?
தும்பிக்கையிலே!
மனிதனோட பலம் எதிலே?
நம்பிக்கையிலே!

- என்று தமிழ்க் கவிஞரொருவர் எழுதியிருந்தார்.

நம்பிக்கை!

அது நம் ஒவ்வொருவருக்கும் உண்டு; எக்கச்சக்கமாய் உண்டு. மறுப்பவர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையோ அல்லது அதற்குள்ளோ தங்களது விரல் நகங்களில் தீட்டப்படும் கறுப்பு மையை உற்றுப் பார்த்துக் கொள்ளலாம். என்றாவது, எப்படியாவது, யாராவது ஓர் ஆட்சியாளர் நீதி, நேர்மையுடன் நம்மை ஆளத்தான் போகிறார் என்று நம்பவில்லை?


தவிர, நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை உண்டு. ஒவ்வொருமுறை ஏதோ காரணம் அமைந்திருந்தாலும் "இந்த முறை கணவன் தன்னை எப்படியும் முதல்முறையாக ப்ஃளைட்டில் ஏற்றி சிங்கப்பூர் அழைத்துச் செல்லப் போகிறான்," என்று ஒரு நடுத்தரவர்க்க மனைவிக்கு நம்பிக்கை. "வரதட்சணையா? அதென்ன கற்கால வழக்கம்? பெண்ணை மட்டும் தாருங்கள்" என்று ஒரு ராஜகுமாரன் குதிரையிலோ, குறைந்தபட்சம் ஓர் ஆட்டோவிலோ வந்து நிற்கப் போகிறான், என்று பெண்ணைப் பெற்றவருக்கு நம்பிக்கை.

எதிர்மறையாய் வேறொரு வித நம்பிக்கையும் உண்டு.

மூட நம்பிக்கை!

தேர்விற்காக விடியவிடியப் படித்து, மாய்ந்து மாய்ந்து தயாராகி, தேர்வுத் தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முழுகி, கடைசியில் கப்போர்டிலுள்ள பச்சைக் கலர் பேனாவைக் கண்ணில் ஒற்றி எடுத்துக் கொண்டு "தேர்வை இந்தப் பேனாவில் எழுதினால் நிச்சயம் நான் பாஸ்," என்று சின்னப்ப தாஸுக்கு ஒரு நம்பிக்கை.

தேடித்தேடி விண்ணப்பித்து, ஆளைப்பிடித்து, கழுதைக் காலைப்பிடித்து ஒருவழியாய் அந்த மல்டிநேஷனல் கம்பெனியில் நேர்முகத் தேர்விற்கு அழைப்பிதழ் வர, படு டென்ஷனுடன் கிளம்பும் மகனிடம், "அந்த நீலநிறக் கர்சீப்பை மறக்காமல் பேண்டிற்குள் வைத்துக்கொள். உனக்கு நீலம்தான் ராசியான கலர்," என்று மகனுக்கு அறிவுறுத்தும் அம்மாவிற்கு ஒரு நம்பிக்கை.

பூனை குறுக்கே ஓடினால், "ஆஹா! சகுனம் சரியில்லையே!"

கிளம்பும்போது "எங்கே போகிறீர்கள்?" என்று யாராவது கேட்டுவிட்டால், "போகும் காரியம் உருப்பட்டாற் போலத்தான்."

காக்கை கத்தினால், "விருந்தாளிகள் வரப்போகிறார்கள் பார்" என்று நினைக்க, விருந்தாளிகள் வந்து சேருவார்கள். அடுத்த முறை ஊரிலுள்ள உறவினர் வீட்டிற்குச் செல்லும்முன் மெயில், போன், எஸ்.எம்.எஸ்., என்று எதுவும் முயலாமல் நேரடியாய்ச் சென்று இறங்கி, திகைத்து நிற்பவரிடம் "என்ன காக்கை கத்தவில்லையா?" என்று கேட்டுப் பார்க்க வேண்டும்.

எது எப்படியோ, இப்படியான மூடநம்பிக்கைப் பட்டியல் நூறு பக்க நோட்டு அளவிற்கு நீளம்!

மனவியலாளர்கள் இதை மாற்றி வேறுவிதமாகச் சொல்கிறார்கள். உங்கள் மனம் எதை நினைக்கிறதோ – நல்லதோ கெட்டதோ - அதை அடைந்துவிடும் தன்மை கொண்டது!

"எனக்கு ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் தலைவலி வரும்" என்று நினைத்தால் அது உங்களைத் தவறாமல் வந்தடையும். "கூடுதலாய்க் கொஞ்சம் பணம் கிடைத்தாலும் அது எனக்குத் தங்காது," என்று நினைப்பவர்களுக்குப் பணம் ஏதும் உபரியாய்க் கிடைத்தாலே அது உடனே செலவாகிப் பர்ஸ் காலியாவது நிச்சயம் என்று தலையில் அடித்து "காட் ப்ராமிஸ்பா," என்கிறார்கள்.

அமெரிக்காவில் கார்ல் சிமன்டண் (Dr. O. Carl Simonton) என்றொரு டாக்டர் இருந்தார். புற்றுநோய் மருத்துவர். தம் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யும் போது ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனித்தார். ஒரே அளவிலான கதிர்வீச்சு சிகிச்சை பெறும் நோயாளிகள் மத்தியில் இரு விதமான விளைவுகள் தென்பட்டன. "ஏன்?" என்று அவருக்குள் கேள்வி எழுந்து, அதை நுணுகி ஆராய்ந்தவர் அந்த விஷயத்தைக் கண்டுபிடித்தார். Positive attitude எனப்படும் ஆக்கபூர்வச் சிந்தனையுள்ளவர்களுக்கு மனம் சோர்வடைந்தவர்களைவிடக் குறைவான பக்க விளைவுகளே இருந்தன. "ஆஹா! மனதிற்கும் உடல்நலனிற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது," என்றவர், புற்றுநோயின் முற்றிய நிலையில் இருந்தவர்களுக்குக் கூட மருத்துவத்துடன் சேர்த்து மனப் பயிற்சி அளிக்கும்போது அவர்களது மரணத்தைத் தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும் அவர்களது சொச்ச வாழ்நாளுக்கு உற்சாகத்தையும் மனக்கட்டுப்பாட்டுத் தரத்தையும் உயர்த்த முடியும் என்று ஆராய்ந்து நிரூபித்தார்.

தமது ஆராய்ச்சியில் டாக்டர் கார்ல் முக்கியமாய்த் தெரிவித்த தகவல், "நோயாளிகளின் நம்பிக்கைக்கு ஏற்ப அவர்கள் குணமடையும் வேகம் அமையும்." அதன் அடிப்படையில் அவர் மருத்துவச் சிகிச்சையும் மனவுறுதி ஆலோசனைகளையும் சேர்த்து அளிக்க ஆரம்பித்தார். சென்ற ஆண்டு இந்த டாக்டர் உணவு உண்ணும்போது புரையேறி இறந்து போனார் என்பது மட்டும் சோகமான உபரித்தகவல்.

வாழ்க்கையில் உங்களது மனம் எதை நம்புகிறதோ அதுவே உங்களுக்கு நிகழும். "என்னை யாரும் கண்டு கொள்வதில்லை; என்னிடம் சரியாகப் பழகுவதில்லை; என்னை ஏமாற்றப் பார்க்கிறார்கள்," என்பது உங்கள் மன நம்பிக்கையென்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அதையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

"எல்லோருக்கும் என்னைப் பிடித்திருக்கிறது; என்னிடம் அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள்," என்று நம்புகிறவருக்கு அவர் வாழ்க்கையில் அவ்விதமே நிகழ்கிறது.

உங்கள் மனம் உங்களது கட்டுப்பாட்டில்! எதைச் சிந்தனை செய்ய வேண்டும் என்பதை நீங்கள்தாம் முடிவடுக்கிறீர்கள். உங்கள் மனதிற்குள் எதைத் திணிப்பது என்பதையும் நீங்கள்தாம் முடிவெடுத்து நிகழ்த்துகிறீர்கள்.

நல்லதை நம்பி மனதிற்குள் நல்ல எண்ணங்களையே திணித்தால் வாழ்க்கையில் அகமும் முகமும் மகிழ்வுடன் திகழும்.


னம் மகிழ, தொடருவோம்...


மனம் மகிழுங்கள்-23 | மனம் மகிழுங்கள்-25

தொடரும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

Posted: 26 Nov 2010 12:06 PM PST

சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக செ‌ன்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

எச்ஐவி குழந்தைகளுக்கு உதவ விளம்பரங்களில் நடிக்கும் கமல்!

Posted: 27 Nov 2010 03:09 AM PST

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காகவே இனி நான் விளம்பரப் படங்களில் நடிக்க உள்ளேன் என நடிகர் கமல்ஹாஸன் கூறியுள்ளார்.

பீகார் தேர்தல் முடிவுகள் - காங்கிரஸுக்கு ஒரு பாடம்!

Posted: 27 Nov 2010 08:14 AM PST

ந்தியாவின் பழமையான வரலாறு முதல் இன்றைய வரலாறு வரை தனி இடம் பெற்று வரும் பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள் வந்து விட்டன.

தங்கம் ஏற்றுமதியில் ரூ.480 கோடி ஊழல்!

Posted: 27 Nov 2010 11:42 AM PST

மும்பை: தங்கம் ஏற்றுமதியில் நடந்துள்ள, 480 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக, மகாராஷ்டிரா, பென் நகர கூட்டுறவு வங்கி தலைவர் சிசிர் தர்கார் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட ஆறு பேர், சி.பி.ஐ., காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

16ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவு!

Posted: 27 Nov 2010 12:34 PM PST

வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் 16ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமையன்று நிறைவடைந்தது.

கருணாநிதியின் cheap political gimmicks….!

Posted: 28 Nov 2010 05:15 AM PST

 

 

 

தன்னிடம் லஞ்சம் கேட்டதை இவ்வளவு காலம் கழித்து சொல்கிறாரே டாட்டா? - அன்பு, கடலூர்

"நேரம் பாத்துச் சங்கு ஊதுறவந்தான் வெவரந்தெரிஞ்ச ஆண்டி" என ஊர்ப்பக்கம் சொல்வதைக் கேட்டதில்லையா? இபோது பொருத்தமான நேரம் வந்துள்ளதால் சொல்லிவிட்டார் ரத்தன் டாட்டா!

க்ராஃபிக்ஸ் பயிற்சி - Preference Setting

Posted: 01 Dec 2010 05:08 AM PST

க்ராஃபிக்ஸ் பயிற்சி -  Preference Setting

வாசக நெஞ்சங்களுக்கு, இதுவரை ஃபோட்டோஷாப் இன்டர்ஃபேஸ் குறித்து விபரமாகத் தெரிந்துகொண்டோம். தொடர்ந்து சில (அடிப்படைகளை) தெரிந்து கொள்வோம் வாருங்கள்!

2ஜி வருவாய் இழப்பு உத்தேசமானதே : ஆ. ராசா!

Posted: 01 Dec 2010 11:58 AM PST

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடுகளால், மத்திய அரசிற்கு ரூ.1.76 இலட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறுவது மண்டையைக் குழப்பும்  தொகை என்றும் உத்தேசமான தொகையே என்றும் தொலைத் தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ. ராசா கூறியள்ளார்.

பதவி ஏற்று ஒரு நாள் கூட ஆகாத நிலையில் ஆந்திர அமைச்சர்கள் இருவர் ராஜினாமா!

Posted: 01 Dec 2010 12:14 PM PST

ஆந்திராவில் புதன் கிழமை காலையில் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்ட இரு அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து புதிய முதல்வர் கிரண் குமார் ரெட்டிக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர்.

என் சொத்து 6 கோடி மட்டுமே : கருணாநிதி!

Posted: 01 Dec 2010 12:26 PM PST

வங்கிக் கணக்கில் ரூபாய் 5 கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 134 வைப்பு நிதி தவிர, சேமிப்பு கணக்கில் சுமார் ரூபாய் 35 லட்சத்து 90 ஆயிரத்து 86 ஆகியவையே தன்னுடைய சொத்துகள் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைத் தாக்குதல்- பலஸ்தீன் இளைஞன் படுகாயம்

Posted: 01 Dec 2010 12:37 PM PST

கடந்த புதன்கிழமை (01.12.2010) அதிகாலை காஸாவின் வடக்குப் பிராந்தியத்தின் பெய்ட் ஹனூன் கடவைக்கருகில் சரளைக் கற்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பலஸ்தீன் தொழிலாளர்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் சரமாரியான துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 18 வயதான பலஸ்தீன் இளைஞன் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

ஆண்டிப்பட்டி விபத்து - 14 பேர் பலி!

Posted: 01 Dec 2010 12:47 PM PST

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதன் கிழமை இரவு இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி நிகழ்ந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்!

Posted: 07 Nov 2010 11:47 PM PST

1. உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:.

நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர். 


நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம். இத்தகைய சிந்தனை தனித்துவத்தின் இருப்பை நிராகரிக்கின்றது. இதன் பயன், கடவுளின் இருப்பை மறைமுகமாக நிராகரிக்கிறது. ஏனெனில், கடவுள் ஒவ்வொருவரையும் அவரவருக்கான தனித்துவம்-தனித்தன்மையுடனே படைத்துள்ளார்.
 
மிகச் சரியாக ஒன்று போல் சிந்தித்து ஒன்று போல் செயல்படும் எந்த இரு மனிதர்களையும் காண இயலாது. அவ்வாறு ஆக்கவும் முடியாது. எல்லா ஆணும் பெண்ணும் அவரவர்களுக்கான வழிகளிலேயே செயல்படுகின்றனர்; ஏனெனில், ஒவ்வொருவரினுள்ளும் கடவுள் அவரவரின் வழியிலேயே செல்ல தூண்டுகிறார். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!
 
2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!
 
மன அமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது நம்மை நோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீது தவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம். நாம் மனக்குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம். இது தூக்கமின்மை, வயிற்று அல்சர் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாக காரணமாகிறது. இத்தகைய அவமானப்படுத்துதல் அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறை நிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால் மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது. இந்தத் தவறான பழக்கத்துக்கு முடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மறப்போம்; மன்னிப்போம்; முன் செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பை வளப்படுத்திக் கொள்வோம்.
 
3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்!
 
இவ்வுலகம் முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின் சொந்தத் தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர். அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் - அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால். ஆனால், ஒருவேளை வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின் சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள். இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சி செய்து, உங்களை நீங்களே ஏன் சாகடிக்க வேண்டும்? அவர்களின் அங்கீகாரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதியானதல்ல! நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள் வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.
 
4. பொறாமை கொள்ளாதீர்!
 
வயிற்றெரிச்சல்(பொறாமை) கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அனுபவம் உள்ளவர் தான்! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம். இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காக நீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா? கூடாது!
 
நினைவில் கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது. நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்க முடியாது. நீங்கள் பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறு ஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப் பழிப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களை எங்குமே கொண்டு சேர்க்காது; அது உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்!
 
5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!
 
உங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள் தான் தோற்றுப்போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத் தகுந்தாற் போல் வாழ உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத் தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமான மாற்றத்தையும் இனிமையான உங்களுக்கு ஒத்துப்போகும் நிலையையும் காண்பீர்கள்.
 
6. உங்களால் குணமாக்க முடியாததைச் பொறுத்துக் கொள்ளுங்கள்!
 
இது தீமையை நன்மையாக்குவதற்கான அருமையான வழியாகும். தினசரி நம் கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும் விபத்துகளை நாம் சந்திக்கின்றோம். நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ அல்லது அவற்றை மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர்கொள்வது எவ்வாறு என்று நாம் கண்டிப்பாக பயில வேண்டும். அவற்றை நாம் மலர்ச்சியாக சகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்; அது பொறுமை, உள்சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு வழங்கும்.
 
7. சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்!
 
இந்த முக்கியமான தேவையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்தல் நன்று. நாம் அடிக்கடி நம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறோம். இது நமது தன்முனைப்பு-செருக்கைத் திருப்தி படுத்துகிறது. உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான கவலைகளை அளிக்கவல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? உங்களின் புறச்செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்வதால் மன அமைதியை அடையமாட்டீர்கள். உலகத்துடனான (பொருள்முதல்வாதத்துடனான) தொடர்பைக் குறைத்துக் கொண்டு, வணக்கங்கள், தியானம், தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம் செலவழியுங்கள். இது ஓய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள் குறைந்த மனம், அதிக மன அமைதியை உருவாக்கும்.
 
8. ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்
 
தியானம் - உள்மன ஆய்வு - மனதுக்கு அமைதி தருவதோடு, தொந்தரவு தரும் எண்ணங்களிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது. இது அமைதியான மனதின் அதிஉயர் நிலையாகும். தியானம் செய்வதற்குத் தன்னைத் தானே முயன்று பழகிக்கொள்ளுங்கள். தினசரி குறைந்தது அரைமணி நேரமாவது உள்ளார்ந்தமாக தியானம் செய்ய முடிந்தால், உங்கள் மனம் அடுத்த இருப்பத்து மூன்றரை மணி நேரத்துக்கு அமைதியடைவதற்கு உத்தரவாதமே வழங்கலாம். அத்தகைய ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், முன்பு உள்ளதைப் போன்று உங்கள் மனம் அவ்வளவு இலகுவாக தொந்தரவு அடையாது.

சிறிது சிறிதாக தியானம் செய்வதன் அளவைத் தினசரி அதிகரித்துக் கொண்டால், அதன் பயனை அடைந்துக் கொள்ளலாம்.  ஒருவேளை இது உங்களின் தினசரி வேலைகளில் தலையிடுவதாக எண்ணலாம். அதற்கு மாறாக, இது உங்களின் திறமையை அதிகரிக்க வைப்பதோடு, மிகக் குறுகிய காலத்தில் நல்ல விளைவுகளை உருவாக்க உங்களால் முடியும்.
 
9. உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்!
 
வெற்றிடமான மனம் சாத்தானின் பயிற்சிகளம்! எல்லா தீய பழக்கங்களும் வெற்றிடமான மனங்களிலிருந்தே உருவாகின்றன. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை எண்ணங்களாலும் பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக உங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில் ஏதாவது செய்யுங்கள். பணமா? அல்லது அமைதியான உள்ளமா? இதில் எது உங்களிடம் அதிக பெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுதுபோக்குகளில் பெரும்பாலும் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால், நீங்கள் மனநிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும். உடல் ஓய்வு எடுக்கும் நேரங்களில் கூட, ஆரோக்கியமான வாசிப்பிலும் கடவுளின் பெயரை உளப்பூர்வமாக கண்ணை மூடி உச்சரிப்பதிலும் உங்கள் உள்ளத்தை நிறைத்துக் கொள்ளலாம்.
 
10. தள்ளிப்போடாதே; எதற்கும் வருந்தாதே!
 
"இது என்னால் முடியுமா? முடியாதா?" என்று பெரிதாக எண்ணி காலம் கடத்தி நேரத்தை வீணாக்காதீர்கள். இத்தகைய பயனற்ற மனப்போராட்டங்களால் நாட்கள், வாரங்கள், மாதங்கள் சிலவேளை வருடங்கள் கூட வீணாகலாம். உங்களால் போதுமான முழு அளவுக்குத் திட்டமிட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில், எதிர்காலத்தில் நடப்பதை உங்களால் ஒருபோதும் முன்பே பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது. உங்கள் நேரத்தின் மதிப்பை உணர்ந்து, முடிக்க வேண்டியவைகளை யோசித்துக் கொண்டிராமல் உடனடியாக செய்யத் துவங்குங்கள்.
 
முதல் முறை நீங்கள் தோல்வியடைவது விஷயமேயில்லை. நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் பயின்று அடுத்த முறை நீங்கள் பரிபூரணமான வெற்றியடையலாம். சாய்ந்து உட்கார்ந்து கவலை கொண்டிருப்பது எதற்கும் பயன் தராது - மன அமைதியைக் கெடுப்பதைத் தவிர. உங்களின் தவறுகளிலிருந்து பாடம் பயிலுங்கள்; ஆனால் ஒருபோதும் கடந்து போனதை நினைத்து வருந்தி ஏங்காதீர்கள். எதற்கும் வருத்தமடையாதீர்கள். எது நடந்ததோ அது நடப்பதற்குரிய விதியின் வழியில் நடந்து முடிந்தது. கிடைக்காத பாலுக்கு ஏன் அழ வேண்டும்?

- வாசகர்: இளைய வைகை

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...