தமிழில் தேசிய கீதம் பாடத்தடையில்லை Posted: 13 Dec 2010 09:24 PM PST தமிழில் தேசிய கீதம் பாடுவதை ரத்து செய்து, இலங்கை அதிபர் ராஜபக்சே தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து தமிழர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
 |
என்.எல்.சி.க்கு விரைவில் நவரத்னா அந்தஸ்து! Posted: 13 Dec 2010 10:31 PM PST நல்ல இலாபத்துடனும், சிறப்பாகவும் செயல்பட்டுவரும் என்.எல்.சி. நிறுவனத்துக்கு விரைவில் நவரத்னா அந்தஸ்து கிடைக்கும் என்று அதன் தலைவர் அன்சாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பு, குடியரசு தின விழாவின்போது வெளியாகலாம் என்று அவர் கூறினார்.
 |
மதுபான விளம்பரத்தில் நடிக்காததால் சச்சினுக்கு 20 கோடி இழப்பு Posted: 14 Dec 2010 12:22 AM PST மதுபானா விளம்பரங்களில் நடிக்க நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மறுத்துவிட்டதை அடுத்து அவருக்கு ஆண்டுக்கு சுமார் 20 கோடி ரூபாய் அளவில் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
 |
2G : காங்கிரஸ் தனிமைபடுத்தப்பட்டுள்ளது - அத்வானி Posted: 14 Dec 2010 04:58 AM PST பாஜக முன்னாள் தலைவர் அத்வானி டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு கூட்டத் தொடர் முழுவதும் முடங்கிப்போனது இதுவே முதல்முறை. இதற்கு காங்கிரஸ்கட்சியே காரணம் என்று தெரிவித்துள்ளார்.
 |
கைதிகள் குடும்பத்துடன் வசிக்க திறந்த வெளி சிறைச்சாலை Posted: 14 Dec 2010 05:11 AM PST கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் சிறை வாழ்க்கையினை கழிக்கும் வகையில் திறந்த வெளி சிறைச்சாலை அமைக்கப்பட உள்ளது. மத்தியபிரதேச மாநிலம் ஹூசாங்கனாபாத் மாவட்டத்தில் 17 ஏக்கர் பரப்பளவில் ரூ. 3.25 கோடியில் சிறைச்சாலை காலனியை போக்குவரத்துறை அமைச்சர் ஜெகதீஷ் தேவ்டா திறந்து வைத்தார். இதில் 25 குடியிருப்பு வீடுகள் கட்டப்படுகின்றன.
 |
பொறியியல் படிப்பு - 31,000 இடங்கள் காலியாக உள்ளன Posted: 14 Dec 2010 05:13 AM PST தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 1 லட்சத்து 10 ஆயிரத்து 206 மாணவ- மாணவிகள் அரசு ஒதுக்கீடு மூலம் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டிலும் 9 ஆயிரத்து 500 இடங்கள் காலியாக உள்ளன.
 |
இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை உயர்வு! Posted: 14 Dec 2010 06:38 AM PST சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததை அடுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன.
 |
விக்கிலீக்ஸ் நிறுவனர் அஸான்ஜி ஜாமீனை எதிர்த்து சுவிஸ் மனு! Posted: 14 Dec 2010 12:48 PM PST சுவிட்சர்லாந்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அஸான்ஜிக்கு நீதிமன்றம் பிணை வழங்கியதை எதிர்த்து சுவிஸ் அரசு மேல்முறையீடு செய்துள்ளதால் அஸான்ஜியின் விடுதலை தாமதமாகிறது.
 |
2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்! Posted: 14 Dec 2010 01:21 PM PST 2011ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்குப் பின் அமையவுள்ள தமிழக அரசு கூட்டணி அரசாக இருக்கும். அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெறும் என மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா தெரிவித்துள்ளார்.
 |
பிறந்த சில மணிநேரத்தில் தாயால் கைவிடப்பட்ட குட்டி யானை! Posted: 13 Dec 2010 10:28 PM PST கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதியில் பிறந்த சில மணிநேரத்திலேயே தாய் யானையால் கைவிடப்பட்ட குட்டி யானை ஒன்று தாயைப் பிரிந்த சோகத்தில் உயிருக்குப் போராடி வருவது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 |
இந்தியர்களின் கருப்புப் பணம் பற்றி தகவல் தர 10 நாடுகள் சம்மதம்! Posted: 13 Dec 2010 11:48 PM PST வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள கருப்புபணம் பற்றிய தகவல்களை தர சுவிட்சர்லாந்து உட்பட 10 நாடுகள் சம்மதித்திருப்பதாக சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 |
சிதம்பரத்துக்கு ஆதரவாக தாக்கரே! Posted: 14 Dec 2010 04:29 AM PST வேறு மாநிலத்தில் இருந்து இடம் பெயர்ந்து வருபவர்களாலேயே டில்லியில் கற்பழிப்பு கொலை மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்று தெரிவித்து இருந்தார்.
 |
சென்னையில் விஷவாயு சிலிண்டர்கள் பறிமுதல் Posted: 14 Dec 2010 04:54 AM PST உலோகங்களைப் பற்றவைக்கும் சாதனத்தில் பயன்படுத்துவதற்காக சீனாவிலிருந்து 65 சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவை பெரம்பூரிலுள்ள பின்னி மில்லில் வைக்கப்பட்டுள்ளன.
 |
காங்கிரசாரிடம் 'கை' நீட்டிய கலெக்டர்! Posted: 14 Dec 2010 05:16 AM PST கலைஞர் வீடு வழங்கும் திட்டத்துக்கான அழைப்பிதழில் ஆரணி மக்களவை உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளின் பெயர்களை போடாமல் அழைப்பிதல் அச்சடிக்கப் பட்டதாக தெரிகிறது.
 |
ஜாமீன் கோரி மதானி உயர் நீதிமன்றத்தில் மனு! Posted: 13 Dec 2010 09:31 PM PST 2008ஆம் ஆண்டு பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவம் சம்பவம் தொடர்பாக கடந்த ஆகஸ்டு மாதம் 17ஆம் தேதி கேரளா மாநிலத்தை சேர்ந்த அப்துல் நாசர் மதானி பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 |
பேப்பர் குடோனில் தீ விபத்து! Posted: 13 Dec 2010 10:21 PM PST திருச்சியில் பேப்பர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பாலகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 |
கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன் கவலைக்கிடம்! Posted: 13 Dec 2010 11:06 PM PST கேரள மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கருணாகரனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. மேலும் சுவாச கோளாறினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 10ஆம் தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
 |
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மனு தள்ளுபடி Posted: 14 Dec 2010 04:15 AM PST தன்மீதான சொத்து குவிப்பு வழக்கு ஆவணங்களை மொழிபெயர்த்ததில் பிழைகள் உள்ளதால், பிழைகளைச் சரி செய்யும் வரை இடைக்காலத் தடை விதிக்கும்படி கேட்டிருந்தார் ஜெயலலிதா. ஆங்கிலம்,தமிழ் மொழிகள் தெரிந்த உதவியாளரை வைத்துக் கொண்டு நீதிபதி விசாரிக்கலாம். எனவே இடைக்கால தடை விதிக்க முடியாது என்று ஜெயலலிதாவின் மனுவை நிராகரித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
 |
சென்னையில் ரூ.400 கோடி செலவில் ரத்த வங்கி தலைமையகம் Posted: 14 Dec 2010 04:23 AM PST ரத்ததான குழுமம் சார்பில் தொடர்ச்சியாக 3 முறை ரத்தம் வழங்கிய மாணவ-மாணவியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி சென்னை அரசுப் பொது மருத்துவக் கல்லூரி வளாகத்தில் திங்கள் கிழமையன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கிய மாணவ-மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
 |
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது Posted: 13 Dec 2010 09:28 PM PST ஆந்திராவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சார்ந்த விவசாயிகள் உடனடியாக நிவாரணம் வழங்கக்கோரி மனு கொடுக்க சட்ட சபைக்கு வந்த விவசாயிகளைச் சந்திக்க முதல்வர் கிரண் குமார் ரெட்டி மறுத்து விட்டார்.
 |
0 comments:
Post a Comment