மனம் மகிழுங்கள்! - 25 : அச்சந் தவிர்


மனம் மகிழுங்கள்! - 25 : அச்சந் தவிர்

Link to இந்நேரம்.காம்

மனம் மகிழுங்கள்! - 25 : அச்சந் தவிர்

Posted: 03 Dec 2010 01:32 AM PST

மனம் மகிழுங்கள்!

25 - அச்சந் தவிர்

- நூருத்தீன்

ம் மனமானது எதை நினைக்கிறதோ அதை நோக்கி நகரக்கூடிய தன்மையுடையது. இதைப் பற்றி முந்தைய அத்தியாயம் ஒன்றில் படித்தோம். அதைச் சற்று விரிவாக இங்கு பார்ப்போம்.

"வறுமையில் உழல்வதே என் தலையெழுத்து."

"என் உடம்பிற்கு ஏதாவது ஒரு நோய்; பாடாய்ப் படுத்திக் கொண்டேயிருக்கும். முழுசாய் ஒருவாரம் நான் ஆரோக்கியமாய் இருந்ததில்லை; மருந்துக் கடைக்கு மொய் எழுதாத நாள் இல்லை."

நாடாளுமன்ற முட்டுக்கட்டை: ரூ.95 கோடி மக்கள் வரிப்பணம் விரயம்!

Posted: 03 Dec 2010 04:54 AM PST

ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சியினரின் பிடிவாதப்போக்கினால் தொடர்ந்து 16வது நாளாக நாடாளுமன்றம் செயல்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மக்கள் வரிப்பணம் சுமார் ரூ.95 கோடி அளவுக்கு வீணாகியுள்ளது.

லாரி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்: நாளொன்றுக்கு 3 கோடி முட்டைகள் தேக்கம்!

Posted: 03 Dec 2010 05:01 AM PST

லாரி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்திற்கு தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் நலச்சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளதால் நாளொன்றுக்கு 3 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.

ராஜபக்க்ஷேவை கைது செய்யக் கோரி சென்னையிலுள்ள இங்கிலாந்து தூதரகம் முற்றுகை!

Posted: 03 Dec 2010 07:16 AM PST

இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அதிபர் ராஜபக்க்ஷேவை இங்கிலாந்து அரசு கைது செய்யக் கோரி சென்னையிலுள்ள இங்கிலாந்து தூதரகம் முற்றுகையிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடைப்பெற்ற போரின்போது அப்பாவித் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு அதிபர் ராஜபக்க்ஷேவும், அரசுப் பொறுப்புகளில் உள்ள அவரது சகோதரர்களும், ராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா ஆகியோரும் தான் காரணம் என்றும், போரின் போது பல்வேறு மனித உரிமை மீறல்களில் இலங்கை ராணுவத்தினர் ஈடுபட்டனர் என்றும் குற்றம் சாட்டி, இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் பேட்ரிக் ஏ.பட்னிஸ் இலங்கை போர் தொடர்பாக அமெரிக்க அரசுக்கு அனுப்பிய ரகசியத் தகவல்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது. இது தவிர, இலங்கை அதிபர் ராஜபக்க்ஷேவை சர்வதேச போர்க்குற்றவாளி என்று பல்வேறு தமிழ் அமைப்புக்களும் குற்றம் சுமத்தி வருகின்றன.

இந்நிலையில் லண்டன் சென்றுள்ள ராஜபக்க்ஷே போர் குற்றத்திற்காக கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை நிலவியது. இலங்கை அரசு இங்கிலாந்து அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பேரில் ராஜபக்க்ஷே கைது பின்னர் தவிர்க்கப்பட்டது.

இதனிடையே போர் குற்றம் புரிந்தாக ராஜபக்க்ஷேவை இங்கிலாந்து அரசு கைது செய்யக் கோரி சென்னையிலுள்ள அந்நாட்டு தூதரகம் முன்பு பெரியார் திராவிடர் கழகத்தினரும், நாம் தமிழர் இயக்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இலங்கை அதிபர் ராஜபக்க்ஷேவுக்கு எதிராக கோசங்களும் எழுப்பப்பட்டன. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

ராஜபக்க்ஷேவின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக நிகழ்ச்சி ரத்து!

Posted: 03 Dec 2010 07:34 AM PST

போர்க்குற்றச்சாட்டு எதிரொலி காரணமாக இலங்கை அதிபர் ராஜபக்க்ஷேவின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக நிகழ்ச்சி ரத்து ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

சவூதி மன்னருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை

Posted: 03 Dec 2010 09:36 AM PST

முதுகு முள்ளந்தண்டில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக சவூதி மன்னருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட விருப்பதாகத் தெரிகிறது.

பெருமளவு நிவாரண உதவி தேவையான நிலையில் பாகிஸ்தான்: ஐ.நா.

Posted: 03 Dec 2010 12:24 PM PST

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களைச் சேர்ந்த சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாகிஸ்தானியர்கள் தமது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும் வழியின்றிப் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது.

புதிய ஏவுகணைச் சோதனையில் இந்தியா

Posted: 03 Dec 2010 12:59 PM PST

கடந்த வியாழக்கிழமை (02.12.2010) இந்திய இராணுவம் ஒரிஸ்ஸா மாநிலத்தில் புதிய சூப்பர்சொனிக் ஏவுகணைச் சோதனையொன்றை வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளது.

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...