ஷார்ஜாவில் 17 இந்தியர்களுக்கு தூக்கு ?


ஷார்ஜாவில் 17 இந்தியர்களுக்கு தூக்கு ?

Link to இந்நேரம்.காம்

ஷார்ஜாவில் 17 இந்தியர்களுக்கு தூக்கு ?

Posted: 16 Dec 2010 10:15 PM PST

துபாய் :  ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் அருகே உள்ள ஷார்ஜாவில் 17 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

ஷார்ஜாவில் உள்ள ஒரு தொழிலாளர்கள் விடுதியில் (Labourers camp) இந்திய மற்றும் பாகிஸ்தானி தொழிலாளர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட சிறு கைகலப்பு மோதலாய் மாறி மிஸ்ரி நஸீர் கான் எனும் பாகிஸ்தானியர் ஜனவரி 2009ல் கொல்லப்பட்டார்.

அது சம்பந்தமான வழக்கில் 17 இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. நீதிமன்றம் கேட்டு கொண்டதற்கிணங்க கொலை இவ்வாறு நடந்திருக்க கூடும் என்று விவரித்து காட்டும் சிடியை காவல்துறை ஒப்படைத்தது. ஆனால் காவல்துறை ஆஜராகதாதல் அவர்களை குறுக்கு விசாரணை செய்ய முடியவில்லை என்றும் அதனால் வழக்கு குறுக்கு விசாரணைக்காக வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடும் வக்கீல் பிந்து சுரேஷ் செத்தூர் கூறினார். குறுக்கு விசாரணை முடிந்து அன்றே தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி- இந்தியா திணறல் 136 ரன்களுக்கு ஆல் அவுட்

Posted: 17 Dec 2010 02:50 AM PST

சென்டுரியன் (தென் ஆப்ரிக்கா):தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி, தனது முதல் டெஸ்ட் போட்டியில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது.நேற்று சென்டூரியன் நகரில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் அரங்கில், கடுமையான மழையினால்  சுமார் 4 மணி நேரம் தாமதமாக  ஆரம்பித்த முதல் போட்டியில் இந்திய அணி வீரர்கள் வழக்கம்போல் வேகப்பந்து வீச்சுக்கு எளிதாக இரையானார்கள் .

மனம் மகிழுங்கள்! - 27 : மனதில் உறுதி வேண்டும்

Posted: 17 Dec 2010 06:25 AM PST

மனம் மகிழுங்கள்!

27 - மனதில் உறுதி வேண்டும்

- நூருத்தீன்

"னதில் உள்ளதை வாய்விட்டுச் சொன்னால் தானே நமக்குத் தெரியும்; ஏதாவது உதவலாம்."

ஏதோ ஒரு கவலை; அதை மனதிலேயே வைத்துக் கொண்டு வெளியில் கொட்டாமல் உம்மனா மூஞ்சியாய் இருக்கும் ஒருவனைப் பார்த்து அவனது நண்பர்கள் இப்படி உரைப்பதைக் கேட்டிருப்பீர்கள். ஒருவேளை நீங்களே சொல்லியிருக்கலாம்; அல்லது உங்களுக்கே நடந்திருக்கலாம். என்ன செய்ய? அனைத்தையும் மனதில் போட்டுப் பூட்ட முடியாது. சில சமயம் மனதிலுள்ள சிந்தனைகளை வாய்விட்டுச் சொல்ல வேண்டியதும் அவசியமாகிறது.

மனதில் ஆக்கபூர்வமான – பாஸிட்டிவ் – எண்ணங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முன்னர் பார்த்தோமல்லவா? அதை வலுவாக்கி உரமேற்றிக் கொள்ள உறுதிமொழி தேவைப்படுகிறது? என்ன உறுதிமொழி? ஒருவிதமான மன உறுதிமொழி. எதற்காக இது?

கருணாநிதிதான் உண்மையான கம்யூனிஸ்டு: கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.!

Posted: 17 Dec 2010 09:52 AM PST

கம்யூனிஸத்தின் உண்மையான கொள்கைகளைப் பின்பற்றும் கம்யூனிஸவாதி கருணாநிதி மட்டுமே என்று திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி கூறியுள்ளார்.

ஓடும் பேருந்தில் 12 லட்சம் கொள்ளை! 2 பெண்கள் கைது

Posted: 17 Dec 2010 12:26 PM PST

புதுச்சேரி:  ஓடும் பேருந்தில் காவல்த்துறை தலைமைக்காவலர் ஒருவரிடமிருந்து ரூ.12 லட்சத்தை இரண்டு பெண்கள் கொள்ளையடித்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அழகிகள் போட்டோவை காட்டி சுற்றுலாப் பயணிகளிடம் கொள்ளை!

Posted: 17 Dec 2010 12:37 PM PST

விபசாரத்திற்கு பெண்களை இருப்பதாக கூறி சுற்றுலா பயணிகளிடம் அழகிகளின் போட்டோக்களை காண்பித்து, கொள்ளையடித்த சம்பவம் மூணாறில் நடந்துள்ளது. இது தொடர்பாக அக்கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவரை மூணாறு காவல்துறையினர் கைது செய்தனர்.

விடுதலையானார் விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்ச்!

Posted: 17 Dec 2010 12:50 PM PST

லண்டன் :  பிரிட்டன் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பிணையில் வெளிவந்துள்ள பிரபல விக்கிலீக்ஸ்  நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், உண்மைகளை வெளிக்கொண்டு வர தொடர்ந்து போராடுவேன். என்றுக் கூறியுள்ளார்.

பாமக ஆதரவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது: அன்புமணி

Posted: 17 Dec 2010 09:20 AM PST

தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் துணை இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என மத்திய முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

குடிபோதையில் கணவனை அடித்துக் கொன்ற மனைவி

Posted: 17 Dec 2010 10:42 AM PST

பல்லடம்: குடிபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவனை சவுக்கு கட்டையால் அடித்து படுகொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விக்கிலீக்ஸ்: விசாரணை என்ற பெயரில் கொல்லப்படும் காஷ்மீர் மக்கள்

Posted: 17 Dec 2010 12:06 PM PST

காஷ்மீரில் உள்ள பாதுகாப்புப் படையினரால்  காவல்நிலையங்களுக்கு விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்படுபவர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படுவதாக விக்கிலீக்ஸில் வெளியான தகவலை லண்டன் கார்டியன்  பத்திரிகை முக்கிய செய்தியாக வெளியிட்டுள்ளது.

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...