நாடாளுமன்றம் செயல்படாததால் 146 கோடி ரூபாய் வீண்! Posted: 13 Dec 2010 07:48 AM PST 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளால் நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டது என்று கூறப்படுவது வேண்டுமானால் அனுமானமாக இருக்கக் கூடும். ஆனால் இப்பிரச்சனையை முன்வைத்து அரசுக்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் பிரச்சனைகளால் 146 கோடி ரூபாய் உண்மையான இழப்பு ஏற்பட்டுள்ளது.
 |
சைக்கிள் ஓட்டினால் ஆண்மைக்குறைவு! Posted: 11 Dec 2010 11:18 AM PST பாஸ்டன்: வாரம் ஒன்றுக்கு சராசரியாக 5 மணி நேரத்துக்கு மேலாக சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஆண்மைக்குறைவு உண்டாவதாக அமெரிக்க பலகலை கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
|
பலஸ்தீன் அமைதிப் பேரணியினர் மீது இஸ்ரேலிய அடாவடி Posted: 11 Dec 2010 11:25 AM PST கடந்த சனிக்கிழமை (11.12.2010) அல் கலீல் அருகில் பெய்ட் உம்மார் பகுதியில் இஸ்ரேலிய பிரிவினைச் சுவருக்கு எதிராக இடம்பெற்ற வாராந்த அமைதிப் பேரணியினை இடைமறித்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை மேற்கொண்ட அடாவடித் தாக்குதலினால் பலஸ்தீனர்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர். |
இளவரசர் சார்ள்ஸ் சென்ற கார் மீது அழுகிய முட்டைவீச்சு! Posted: 11 Dec 2010 11:42 AM PST பிரித்தானியாவின் பட்டத்து இளவரசர் சார்ள்ஸ் தன் மனைவி கமில்லாவோடு பயணம் செய்துகொண்டிருந்த கார்மீது அழுகிய முட்டைகளை வீசியும் கலர் பெயிண்ட்டை வாரி இறைத்தும் பல்கலைக்கழக மாணவர்கள் தமது வெறுப்பையும் அதிருப்தியையும் வெளிக்காட்டியுள்ளனர் என்று லண்டனில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. |
விக்கிலீக்ஸ்! பாக்.பயங்கரவாத முகாம்கள் மீண்டும் செயல்படத் துவங்கின Posted: 11 Dec 2010 12:18 PM PST இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டன என்று ஆதார ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
|
விமான சிப்பந்தியின் எடை கூடியதால் பணிநீக்கம் செய்ய முடியாது Posted: 11 Dec 2010 10:47 PM PST  ஏர் இந்தியா விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றிய கொல்கத்தாவைச் சேர்ந்த நீபா தார் என்ற சிப்பந்திக்கு உடல் எடை கூடியதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பணி நீக்கம் செய்யப்பட்ட விமானப் பணிப்பெண்ணுக்கு மீண்டும் வேலை தர வேண்டும் என ஏர் இந்தியா நிறுவனத்திற்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  |
வீட்டில் தனியே இருந்த பெண் வெட்டிக்கொலை! Posted: 13 Dec 2010 12:09 PM PST மதுரை: வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் ரவுடிகளால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
|
தங்க சங்கிலியை விழுங்கிய திருடன்! போலிஸார் தவிப்பு Posted: 13 Dec 2010 12:20 PM PST ஆலப்புழை : கேரள அரசு பேருந்தில் பயணம் செய்த பயணியிடம், திருடிய தங்க சங்கிலியை திருடன் விழுங்கியதால், அவன் வயிற்றில் இருந்து அதை வெளியே எடுக்க முடியாமல் காவல்துறையினர் தவித்து வருகின்றனர்.
|
திமுகவில் இணையத் தாமதம் ஏன் - திருப்பூர் எம்.எல்.ஏ. பதில்! Posted: 13 Dec 2010 12:47 PM PST மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருப்பூர் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி ஜனவரி மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத் தொடருக்குப் பின் திமுகவில் இணையவுள்ளதாகக் கூறியுள்ளார்.
 |
முதன் முறையாக பி.எஸ்.எஃப் வீரர்களுக்கு வார விடுமுறை! Posted: 13 Dec 2010 12:55 PM PST புதுடில்லி: இந்திய இராணுவ வரலாற்றிலேயே முதன்முறையாக பணியில் உள்ள எல்லை பாதுகாப்புப்படை வீரர்களுக்கு, ஒருநாள் வார விடுமுறையும்; 24 மணி நேர பணியில் ஆறு மணி நேர ஓய்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
|
SMS மூலம் பெண்களுக்கு “உல்லாச” அழைப்பு! Posted: 13 Dec 2010 01:15 PM PST சென்னை: SMS எனப்படும் குறுஞ்செய்தி மூலம் பெண்களை உல்லாசத்துக்கு அழைத்து தொல்லை கொடுக்கும் செல்போன் தகவல்கள் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
|
நடிகர் ரஜினிகாந்துக்கு அறுபதாம் கல்யாணம் Posted: 09 Dec 2010 12:22 AM PST பிரபல தமிழ் சினிமா நடிகர் ரஜினிகாந்த்-லதா தம்பதிக்கு அறுபதாம் கல்யாணம் தினம் வருவதையொட்டி நாளை 10ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
 |
இந்தியா அபாரம் - அனைத்து போட்டிகளிலும் வெற்றி Posted: 10 Dec 2010 06:27 AM PST சென்னை: இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்தாம் மற்றும் இறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய பந்து வீச்சாளர்களின் அபார பந்து வீச்சால் நியூஸிலாந்து அணி திணறியது. 
|
வீழ்ச்சியை நோக்கி டாடா நானோ கார் Posted: 10 Dec 2010 06:44 AM PST மும்பை: மிகப் பெரிய எதிர்பார்ப்பிற்கிடையே அறிமுகப்படுத்தப்பட்ட டாடா நானோ கார், விற்பனையில் மிக மந்தமாக உள்ளது. தொடர்ந்து ஏற்பட்டு வரும் இயந்திய கோளாறினால் மக்களிடையே ஆர்வம் குறைந்து போய் உள்ளதாக தெரிய வந்துள்ளது. 
|
மனம் மகிழுங்கள்! - 26 : வார்த்தைக்கொரு சக்தி Posted: 10 Dec 2010 08:58 AM PST மனம் மகிழுங்கள்! 26 - வார்த்தைக்கொரு சக்தி - நூருத்தீன் 'காசுக்கேற்ற தோசை' என்றொரு சொலவடை உண்டு; நமக்கெல்லாம் தெரியும். மனவியலாளர்கள் வேறொன்று கற்றுத் தருகிறார்கள் - "வார்த்தைக்கு ஏற்ற வாழ்க்கை"!
அது என்னவென்று மேற்கொண்டு பார்ப்பதற்கு முன் ஒரு வார்த்தை! இங்கு வார்த்தை என்பது நாம் பிறரை நோக்கிச் சொல்வதைப் பற்றியில்லை; நமக்கு நாமே சொல்லிக் கொள்வதைப் பற்றி! நமது சிந்தனைகள் எப்படி நமது சுற்றத்தையும் நட்பையும் உருவாக்குகின்றன என்பதை முன்னர் பார்த்தோம். அதைப்போல் நாம் உதிர்க்கும் வார்த்தைகள் நமது மனப்பான்மையை உருவாக்குகின்றன. நாம் எதைப் பெறப்போகிறோம் என்பதை அவை நிர்ணயிக்கின்றன. | 
|
புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிபிஐ அதிரடி சோதனை! Posted: 10 Dec 2010 02:27 PM PST புதுச்சேரி: புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
|
ஜீவா --கக்கன் --காமராஜர்--கருணாநிதி Posted: 11 Dec 2010 01:04 AM PST "கணக்குக் காட்டுகிறேன்; கண்ணுடையோர் காண" எனத் தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதி, தம் சொத்துக் கணக்கை வெளியிட்டுள்ளார். அதில் சன் டிவியிலிருந்து தம் பங்குத் தொகையாக நூறு கோடி ரூபாய் கிடைத்தது என்று சொல்லியிருந்த வரிகளைப் படித்ததும் என்னைத் தூக்கிப் புரட்டிப் போட்டதுபோல் இருந்தது; நூ.........று.........கோ............டி.......... ரூ........ பா.......ய்........ எனப் படிப்பதற்குள் வாய் உலர்ந்துவிட்டது.
 |
இலங்கையில் பரபரப்பு: வான்புலிகள் ஊடுறுவலா? Posted: 11 Dec 2010 04:17 AM PST  இலங்கை தலைநகர் கொழும்புக்கு மேற்கே 52 கி.மீ. தொலைவில் உள்ள அவிசாவளைப் பகுதி வான்வெளியில் மர்ம ஹெலிகாப்டர் ஒன்று தாழ்வாகப் பறந்ததை பொதுமக்கள் பார்த்ததாக செய்தி வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது வானிலிருந்து தரையிறங்குவது போல மிகவும் தாழ்வாகப் பறந்த அந்த ஹெலிகாப்டர் பின்னர் உயரப் பறந்து சென்று விட்டதாகச் சொல்லப்படுகிறது.  |
இந்திய ஜனாதிபதியாக சுப்ரமணிய சாமி....? Posted: 12 Dec 2010 03:25 AM PST   கவிதைக்குப் பொய் அவசியம்தானா? - ஹசன், மயிலாடுதுறை
கவிதைக்குப் பொய் அழகுதானே தவிரக் கட்டாயத் தேவையில்லை.
ஆனால் தமிழில் அணி இலக்கணம் உண்டு. அதன்படிச் சிலவற்றை உயர்வு நவிற்சியாகச் சொன்னால்தான் கவிதை இனிக்கும்.
என் காதலியின் முகம் - நிலவு; கண்கள்- கருவண்டு.,கன்னம்- ஆப்பிள்; உதடு - ஆரஞ்சு; பற்கள்- முத்து; கழுத்து- சங்கு, குரல்- குயில்.
இப்படி உண்மையில் இல்லை; ஆனால் வர்ணனை. இது இல்லாவிட்டால் கவிதையாக இருக்காது; செய்யுள் ஆகிவிடும்.
 |
இனி தமிழில் தேசிய கீதம் இல்லை: இலங்கை அதிரடி! Posted: 12 Dec 2010 05:00 AM PST இனி சிங்கள மொழியில் மட்டுமே இலங்கையின் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என இலங்கை அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக சன்டே டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 |
20 ரஷ்ய அழகிகள் உளவாளிகளாக இங்கிலாந்தில் ஊடுருவல் : திடுக் தகவல் Posted: 13 Dec 2010 01:53 AM PST இலண்டன் : ரஷ்யாவின் பிரபலமான கவர்ச்சிகரமான உளவாளியான அன்னா சாப்மனின் மேற்பார்வையில் குறைந்தது 20 அழகான பெண்கள் ரஷ்யாவின் உளவாளிகளாக ரஷ்யாவுக்கு தேவையான தகவல்களை பெற்று தர நியமிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து பத்திரிகை செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
 |
அரசுத்துறையை வெறுக்கும் ஐபிஎஸ் அதிகாரிகள்! Posted: 13 Dec 2010 04:34 AM PST அரசுப் பணியே வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டதோ என்ற எண்ணக் கூடிய அளவு ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் அரசுப் பணிகளில் இருந்து விலகி தனியார் நிறுவனங்களில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
 |
சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா டெபாசிட் இழப்பார்! Posted: 13 Dec 2010 11:23 AM PST எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா டெபாசிட்டை இழப்பார் என அனைத்து முத்தரையர் சங்கங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது
|
இலங்கைப் பிரதமர் கிளிநொச்சி விஜயம் Posted: 11 Dec 2010 11:37 AM PST இலங்கைப் பிரதமர் தி. மு. ஜயரத்தின நேற்று (11.12.2010) கிளிநொச்சிக்கு அரசாங்க விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சி, மாங்குளம் பகுதிகளில் புதிய காவல் நிலையங்களைத் திறந்து வைத்த பிரதமர், அங்கே இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு தமிழ் மக்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்தார். |
அமெரிக்க சிறப்புத் தூதுவரின் நிலைமை கவலைக்கிடம் Posted: 11 Dec 2010 01:06 PM PST பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர் ரிச்சார்ட் ஹோல்புரூக்கின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவர் உடனடி அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க உள்ளகத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
|
சென்னையில் ரூ,400 கோடியில் நவீன ரத்த வங்கி! Posted: 13 Dec 2010 12:33 PM PST சென்னை: சென்னையில் ரூபாய் 400 கோடி செலவில் மிகப்பெரிய நவீன ரத்த வங்கி அமைக்கப்படவுள்ளது.
|
10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஓமன் நாட்டில் வேலை Posted: 08 Dec 2010 01:09 PM PST ஓமன் நாட்டிலுள்ள ஒரு முன்னணி நிறுவனத்திற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 22 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட பொதுப் பணியாளர்கள் உடனடியாகத் தேவைப்படுகிறார்கள்.
 |
இந்திய தூதர் அவமதிப்பு! ஹிலாரி வருத்தம் Posted: 10 Dec 2010 03:13 AM PST வாஷிங்டன்: அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் அங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொள்ள சென்றபோது மிசிசிபி விமானநிலையத்தில் விமான நிலைய அதிகாரிகளால் அவமதிக்கப்பட்டார்.
|
60 மணி நேரம் நீரில் மிதக்கும் புதுவைப்பெண்! Posted: 10 Dec 2010 04:12 AM PST புதுச்சேரி : புதுவையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சாதனை முயற்சியாக தொடர்ந்து 60 மணி நேரம் தண்ணீரில் மிதக்கும் சாதனையில் ஈடுபட்டுள்ளார்.
|
ராஜசேகர ரெட்டியின் மரணம் விபத்து அல்ல, கொலை- பெண் பரபரப்பு அறிக்கை Posted: 10 Dec 2010 10:26 PM PST ஆந்திர முன்னாள் முதல்வர் ஓய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறக்கவில்லை என்றும், அவர் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரின் தீவிர ஆதரவாளரான ஒரு பெண் கூறியிருப்பது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 |
காலி நாற்காலியில் வைக்கப்பட்ட நோபல் பரிசு Posted: 10 Dec 2010 11:49 PM PST  2010ம் ஆண்டுக்கான நோபல் அமைதி விருதுக்கு சீனாவின் ஜனநாயகப் போராட்டத் தலைவர் லியூ ஜியாபோ தேர்ந்தெடுக்கப்பட்டார். லியு ஜியாபோவை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுக்காவலில் சீன அரசாங்கம் வைத்துள்ளது. நோபல் பரிசுக்கு அவரைத் தேர்ந்தெடுத்திருப்பதால் சீனா கடும் ஆத்திரம் அடைந்தது. நோபல் பரிசு கமிட்டிக்கு எதிராக தீவிரமான பிரசாரமும் செய்தது.  |
2500 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல்! Posted: 12 Dec 2010 10:12 AM PST சுமார் 2500 கிலோ வெடி பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளதாகவும் இது தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பீகார் காவல்துறையினர் கூறியள்ளனர். பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தின் இரு வேறு இடங்களில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
 |
மீண்டும் மழை : வாணிலை ஆய்வு மையம்! Posted: 12 Dec 2010 09:27 PM PST ஆந்திராவை ஒட்டிய கடலோரப் பகுதியில் மழை மேகம் சூழ்ந்துள்ளதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 |
ராகுல் காந்திக்கு எதிராக கிரிமினல் வழக்குப் பதிவு! Posted: 13 Dec 2010 01:58 AM PST காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்க எதிராக ராஞ்சி தலைமை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 |
ஆப்கானில் பெருகிவரும் அமெரிக்க எதிர்ப்பலை Posted: 11 Dec 2010 12:49 PM PST பக்டியா மாகாணத் தலைநகரான கார்தெஸ் நகர வீதிகளில் திரண்ட நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள், அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ படையினரை தமது நாட்டிலிருந்து வெளியேறக் கோரி மாபெரும் எதிர்ப்புப் பேரணியொன்றை முன்னெடுத்தனர். |
ராமர் கோவில் அருகே மசூதி கட்டவிடமாட்டோம் - சுப்ரமணிய சுவாமி Posted: 11 Dec 2010 11:31 PM PST  விசுவ இந்து தொலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா சென்னை மே.மாம்பலம் இந்து வித்யாலயா பள்ளியில் நேற்று நடைபெற்றது. விழாவில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.  |
ரூ. 68 ஆயிரம் கோடியில் கிராமங்களுக்கு இணையதள சேவை! Posted: 13 Dec 2010 12:44 PM PST புதுடில்லி : ரூ. 60 ஆயிரம் கோடியில் நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களிலும் இணையதள சேவை தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
|
இந்தியத் தூதருக்கு அமெரிக்காவில் அவமதிப்பு! Posted: 09 Dec 2010 01:45 PM PST வாஷிங்டன்: இந்தியப்பெண் தூதர் ஒருவர் அமெரிக்காவில் அவமானப் படுத்தப்பட்டுள்ளமை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பாரம்பரிய சேலை அணிந்து சென்ற அமெரிக்காவுக்கான இந்திய தூதரை மிசிசிப்பி விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
|
பனியில் உறைந்த பாரீஸ்! Posted: 10 Dec 2010 03:31 AM PST பாரீஸ்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் தற்போது கடும் குளிருடன் பனிப்பொழிவும் நிலவுவதால் தலைநகர் பாரீஸ் பனியால் உறைந்து இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.
|
மக்கா மசூதி குண்டு வெடிப்பில் விரைவில் குற்றப்பத்திரிகை! Posted: 12 Dec 2010 09:39 AM PST 2007ஆம் ஆண்டு 9 பேரை பலிவாங்கிய ஹைதராபாத் மக்கா மசூதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பை விசாரணை செய்து வரும் சிபிஐ விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என்று தகவல்கள் கூறுகின்றன.
 |
போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயற்சி! தீவிரவாதிகளா? Posted: 12 Dec 2010 12:48 PM PST கோவை: பாஸ்போர்ட்டில் உள்ள போட்டோவில் தலை மாற்றி வெளிநாடு (துபாய்) செல்ல முயன்ற இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
|
திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா Posted: 13 Dec 2010 02:32 AM PST தமிழக அரசு சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினருடைய முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத் திறனாளிகள், முதிர்கன்னிகள், தசை சிதைவு குறைபாடுடையவர்கள், திருநங்கைகள் போன்றோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
 |
தமிழீழம் ஒன்றே தீர்வு: கிருஷ்ணசாமி Posted: 13 Dec 2010 03:12 AM PST "சிங்கள இனவெறிக் கும்பலின் கைகளில் சிக்கியுள்ள இலங்கைத் தீவில், தமிழ் மக்களின் உரிமைகள் காப்பாற்றப்பட 'தமிழீழம்' மலர்வது ஒன்றே தீர்வு" என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
 |
மக்களவையின் எதிர்காலம் கவலையளிக்கிறது - பிரதமர் Posted: 11 Dec 2010 11:06 PM PST  2G ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் மக்களவை குளிர்கால கூட்டத் தொடர் முற்றிலும் முடக்கப்பட்டிருப்பது கவலை அளிப்பதாக உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.  |
விளைநிலங்களை வீட்டு மனைகளாக்கினால் கடும் நடவடிக்கை Posted: 11 Dec 2010 11:14 PM PST  சேலம்: விளை நிலங்களை வீட்டு மனைகளாக்கி விற்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் எச்சரித்துள்ளார்.  |
நோபல் பரிசு விழா - சீனாவுக்கு நோ சொன்ன இந்தியா Posted: 08 Dec 2010 01:04 PM PST நோபல் பரிசு விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என்ற சீனாவின் வேண்டுகோளை நிராகரித்துவிட்டு அந்நிகழ்ச்சியில் இந்தியா கலந்து கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 |
கத்தார் சிறையிலிருந்து மீனவர்களை தமிழக அரசு மீட்கும்! Posted: 10 Dec 2010 04:50 AM PST கத்தார் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை அங்கிருந்து விடுவிப்பதற்கு ஆகும் மொத்த செலவுகளையும் தமிழக அரசே ஏற்கும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
|
அமெரிக்கத் தீவை விலை பேசிய நித்யானந்தா! Posted: 12 Dec 2010 02:57 AM PST பாலியல் குற்றச்சாட்டுக் காரணமாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளி வந்துள்ள பிரபல சாமியார் நித்யானந்தா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கத் திட்டமிட்டிருந்ததாக சிஐடி விசாரணையின்போது தெரியவந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
 |
காங்கிரஸில் சேரவந்த குஷ்புவை வழியில் வந்தவர்கள் கூட்டிச்சென்றனர்- இளங்கோவன் Posted: 13 Dec 2010 02:23 AM PST பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆளும் கட்சியையும் பிற அரசியல் கட்சிகளையும் அடிக்கடி திரும்பிப் பார்க்க வைக்கும் அரசியல்வாதி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நடிகர் விஜய் மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் அரசியல் கட்சிகளில் இணைந்தது குறித்து கருத்து சொல்லியுள்ளார்.
 |
எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து! Posted: 11 Dec 2010 10:58 AM PST மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்துச் செய்யப்போவதாக பீகார் முதல்வர் நிதீஷ்குமார் அறிவித்துள்ளார்.
|
0 comments:
Post a Comment