சிண்டுமுடியும் ஊடகங்கள் : கருணாநிதி!


சிண்டுமுடியும் ஊடகங்கள் : கருணாநிதி!

Link to இந்நேரம்.காம்

சிண்டுமுடியும் ஊடகங்கள் : கருணாநிதி!

Posted: 30 Nov 2010 01:48 PM PST

திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பூசலை உண்டாக்கி கூட்டணியைத் துண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில ஊடங்கள் செயல்படுவதாகவும் அவர்களது எண்ணம் நிறைவேறாது எனவும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

பாலஸ்தீனத்துக்கு இலங்கை ஆதரவு தொடரும்

Posted: 30 Nov 2010 08:28 AM PST

பாலஸ்தீனத்துக்கு இலங்கை தொடர்ந்து ஆதரவளிக்கும் என இலங்கை அமைச்சரி பௌஸி தெரிவித்துள்ளார். பாலஸ்தீன ஒத்துழைப்பு தினத்தை முன்னிட்டு இலங்கை பாலஸ்தீன அமைப்பு கொழும்புவில் பாலஸ்தீனம் சம்பந்தமான புகைப்படக் கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய அமைச்சரி ஏ.எச்.எம். பௌஸி பாலஸ்தீன மக்கள் பல வருடங்களாக கொல்லப்படுகின்றனர்.பாலஸ்தீன மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கை அவர்களுக்கு ஆதரவளிக்கும் என அவர் தெரிவித்தார். இங்கு வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் பாலஸ்தீன மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளை எடுத்துக் காட்டுவதாக தெரிவித்த பௌஸி இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் பெரும்பாலான நிலங்களை கையகப்படுத்தி அநீதம் இழைப்பதாக குற்றம் சாட்டினார்.

இந்த நிகழ்வில் பாலஸ்தீனத்துக்கான இலங்கைத் தூதர் அன்வர் அக்ஹானும் கலந்து கொண்டார். ஏறத்தாழ 10000 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

Wikileaks - விக்கிலீக்கின் அடுத்த ரகசிய கசிவு எது?

Posted: 30 Nov 2010 07:08 AM PST

இலண்டன்: உலகையே பரப்பாக்கியிருக்கும் விக்கி லீக்ஸ் ரகசிய கசிவு இனைய தளம், விரைவில் அமெரிக்க வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த ஆவனங்களை வெளியிட இருப்பதாக அதன் நிறுவனர் ஜூலியன் தெரிவித்துள்ளார்.

SMS மூலம் பணம் அனுப்பும் வசதி அறிமுகம்

Posted: 30 Nov 2010 06:55 AM PST

புதுடில்லி: SMS என்றழைக்கப்படும் குறுஞ்செய்தி மூலம் பணம் அனுப்பும் வசதி நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பணம் செலுத்தும் அமைப்பு மூலம் இந்த வசதி நாட்டிலுள்ள செல் போன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

'ஜெர்மன் அதிபர் பக்கசார்புடையவரா?' – பலஸ்தீன் மக்களின் ஆதங்கம்

Posted: 30 Nov 2010 05:42 AM PST

ஹமாஸ் படையினரால் பணயக் கைதியாகப் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைச் சிப்பாய் கிலாட் ஷலிட் நினைவாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் அவரது குடும்பத்தாரால் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தைப் பார்வையிடச் சென்றுள்ள ஜெர்மனிய அதிபர் கிறிஸ்டியன் வுல்ஃபின் செயல் தம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் அமைக்கப்பட்டுள்ள பலஸ்தீன் கைதிகளின் உறவினர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப்படைத் தாக்குதலில் மேலும் நான்கு பலஸ்தீனர்கள் படுகாயம்

Posted: 30 Nov 2010 05:34 AM PST

செவ்வாய்க்கிழமை அதிகாலை (30.11.2010) காஸாவின் வடக்குப் பிராந்தியத்தில் சரளைக் கற்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பலஸ்தீன் தொழிலாளர்கள்மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை மேற்கொண்ட அடாவடித் தாக்குதலில் மேலும் நான்கு பலஸ்தீன் தொழிலாளிகள் படுகாயமடைந்துள்ளனர்.

நீரா ராடியா உரையாடல் - விசாரணை நடைபெறுகிறது: சிதம்பரம்!

Posted: 30 Nov 2010 04:25 AM PST

அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் அரசியல் தரகர் நீரா ராடிய நடத்திய தொலைபேசி உரையாடல்கள் வெளியானது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் விசாரணை நடத்தி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

ஜகனுக்குப் பின்னடைவு - காங்கிரசிலேயே தொடருவேன் என சித்தப்பா!

Posted: 30 Nov 2010 04:05 AM PST

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்க மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனும் கடப்பா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகன்மோகன் ரெட்டி முயன்று வரும் நிலையில் அவரது சித்தப்பா காங்கிரஸ் கட்சியிலேயே தொடருவேன் என்று அறிவித்துள்ளார்.

யூதத் தீவிரவாதக் குழுவின் புதிய திட்டம்- ஆபத்தில் அல்-அக்ஸா

Posted: 30 Nov 2010 03:57 AM PST

யூதத் தீவிரவாதக் குழுவொன்று ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் உள்ள அல் அக்ஸா மஸ்ஜித் மீது தாக்குதல் நடாத்தி, அதற்குள் யூத மதவிவகாரங்கள் தொடர்பான பாடநெறியொன்றைத் தொடரத் திட்டமிட்டு இருப்பதாக இஸ்ரேலிய செனல் 7 தொலைக்காட்சி கடந்த திங்கட்கிழமை (29.11.2010) செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தொடரும் தாக்குதல்- அமெரிக்க வீரர்கள் பலி

Posted: 30 Nov 2010 03:48 AM PST

கடந்த ஞாயிற்றுக்கிழமை (28.11.2010) கிழக்கு ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் அமெரிக்கப் படைகளுக்கெதிராக இடம்பெற்ற தாக்குதலுக்குத் தாம் உரிமைகோருவதாக குல்புத்தீன் ஹிக்மத்தியார் அமைப்பைச் சார்ந்த பேச்சாளர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

காஸாமீதான முற்றுகைக்கு முடிவு வேண்டும்- 21 சர்வதேச அமைப்புகள் கோரிக்கை

Posted: 29 Nov 2010 11:34 PM PST

எந்த விதமான நிபந்தனைகளும் இன்றி காஸா மக்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நியாயமற்ற முற்றுகை உடனடியாக நீக்கப்படவேண்டும் என்று 21 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் ஒன்றிணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளன.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையின் எதேச்சதிகாரம்

Posted: 29 Nov 2010 11:26 PM PST

நான்கு மாத காலத்துக்கு ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகருக்குள் நுழையக்கூடாது என அபகரிக்கப்பட்ட ஸில்வான் நிலப்பகுதிகளை மீட்கும் பணியில் போராடிவரும் செயற்பாட்டாளரான அத்னான் கைத் அவர்களுக்கு எதிராக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பொலிஸ் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

பலஸ்தீனர்களை அகதிகளாக்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபை

Posted: 29 Nov 2010 11:08 PM PST

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரின் ஷெய்க் ஜர்ராஹ் பகுதியில் இருந்த குடியிருப்பில் வாழ்ந்துவந்த பலஸ்தீன் குடும்பங்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபை பலவந்தமாக வெயியேற்றியுள்ளதாக ஜெரூசலத்தின் ஊடக வட்டாரங்கள் கடந்த திங்கட்கிழமை (29.11.2010) செய்தி வெளியிட்டுள்ளன.

'தேடுதல்' என்ற போர்வையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்படை அடாவடி

Posted: 29 Nov 2010 10:26 PM PST

கடந்த திங்கட்கிழமை (29.11.2010) காஸாவின் வடக்குப் பிராந்தியம் முழுவதிலும் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்படை தேடுதல் என்ற பெயரில் பெரும் அட்டகாசம் புரிந்துள்ளதாக உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் வெறியாட்டம் - பலஸ்தீன் இளம்பெண் வாக்குமூலம்

Posted: 29 Nov 2010 10:14 PM PST

நவம்பர் மாத ஆரம்பத்தில் தன்னை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறையில் இருந்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவ வழக்குமன்ற விசாரணைகளுக்காக நஹ்ஸனில் உள்ள சிறைப்பிரிவுக்கு மாற்றிய போது மிக மோசமான சித்திரவதைகளை எதிர்கொண்டதாக பலஸ்தீன் இளம் பெண் கைதியான ஸமூத் கர்ராஜேஹ் (வயது 22) வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...