ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் ?



 பிறவியிலேயே ஆண் உறுப்பில் பிரச்னை இருந்தால் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பு உண்டு. எனினும் புகைப் பழக்கம், மதுப் பழக்கம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் காரணங்களாலும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டு மனைவிக்கு குழந்தைப் பேறு அளிக்க முடியாமல் போகலாம்.


மேலும் அதிகமான உடற்பயிற்சி, மன உளைச்சல் தரும் வேலைகள், உடல் பருமன், போதைப் பொருள்களைப் பயன்படுத்துதல் ஆகியவை விந்தணுக்களின் உற்பத்தி-எண்ணிக்கையைப் பாதித்து மலட்டுத்தன்மையை உண்டாக்குகின்றன.

 எப்போதும் பதற்றத்தோடு வேலை செய்வோருக்கு உயிர் அணுக்கள் குறைவானதாக-ஆற்றல் குறைவானதாக இருக்கும். நீண்ட தூரம் வாகனம் ஓட்டுதல்,நீண்ட தூரம் பயணித்தல், ரசாயனத் தொழிற்சாலைகளில் பணிபுரிதல், பூச்சிக்கொல்லி மருந்துகள் அருகில் பணியாற்றுதல் போன்ற பல்வேறு தொழில் சார்ந்த பிரச்னைகள் காரணமாகவும் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.

 பிறவிக் காரணங்கள் இன்றி, பிற காரணங்களால் குழந்தைப் பேறு இல்லாவிட்டால் அதைச் சரி செய்ய முடியும் என்று நம்பிக்கை கொள்வது அவசியம். டாக்டர் என்ன  நினைப்பாரோ, மனைவி என்ன நினைப்பாரோ என்று கருதுவதை கணவன் கைவிட வேண்டும். இருவருமே தங்கள் நலனுக்காகப் பாடுபடுபவர்கள் என்பதை கணவன் உணர்ந்து நடந்து கொள்ள  வேண்டும்.

 ஏனெனில் 90 சதவீத அளவுக்குக் குறைகளைத் துல்லியமாகக் கண்டறிந்து குழந்தைப் பேறு அளிக்கும் அளவுக்கு குழந்தைப் பேறு மருத்துவ அறிவியல் முன்னேற்றம் அடைந்துள்ளது. திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகியும் குழந்தைப் பேறு இல்லாவிட்டால், தம்பதியர் இருவரும் குழந்தைப் பேறு சிறப்பு மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே சிறந்தது.

அனுப்பியவர் சங்கர்
source http://tamilcnn.com

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...