கலாச்சாரம் பண்பாடு பேசிவரும் இவ்வேளையில்
மொழியைப்பற்றி
மொழியில்
ஓசை ஒரு கூறு ,
ஒலி ஒரு கூறு ,
ஓசையின் ஒலி ஒரு கூறு ,
எழுத்து ஒரு கூறு ,
எழுத்தும் ஒலியும் ஓசையும் கொடுக்கும் கருத்து ஒரு கூறு ,
கருத்து கொடுக்கும் பொருள் ஒரு கூறு ,
பொருள் கொடுக்கும் இயக்கம் ஒரு கூறு ,
இயக்கத்தின் பொருண்மை ஒரு கூறு ,
பொருண்மையின் வெளிப்பாடு ஒரு கூறு ,
வெளிப்பாட்டின் தன்மை ஒரு கூறு ,
தன்மையில் வடிவம் ஒரு கூறு ,
வடிவத்தின் உரு ஒரு கூறு ,
உருவின் நிலைப்பாடு ஒரு கூறு ,
நிலைப்பாட்டின் அமைப்பு ஒரு கூறு ,
அமைப்பின் பயன்பாடு ஒரு கூறு ,
பயன்பாட்டின் நீட்சி ஒரு கூறு ,
நீட்சியின் நிலைத்தன்மை ஒரு கூறு ,
நிலைத்தன்மையின் செயல்பாடு ஒரு கூறு ,
செயல்பாட்டின் ஆக்கம் ஒரு கூறு ,
ஆக்கத்தின் தொடர்ச்சி ஒரு கூறு ,
தொடர்ச்சியில் பண்படுதல் ஒரு கூறு ,
பண்படுதலில் பழக்கம் ஒரு கூறு ,
பழக்கத்தின் திரட்சி ஒரு கூறு ,
திரட்சியின் ஆளுமை ஒரு கூறு ,
ஆளுமையின் ஆதிக்கம் ஒரு கூறு ,
ஆதிக்கத்தின் எழுச்சி ஒரு கூறு ,
எழுச்சியின் மிச்சம் ஒரு கூறு ,
மிச்சத்தின் எச்சம் ஒரு கூறு ,
எச்சத்தின் வீரியம் ஒரு கூறு ,
வீரியத்தின் தேடல் ஒரு கூறு ,
தேடலில் பயணம் ஒரு கூறு ,
பயணத்தின் பாதை ஒரு கூறு ,
பாதையின் பார்வை ஒரு கூறு ,
பாதையில் பார்வை ஒரு கூறு ,
பார்வையில் மாற்றம் ஒரு கூறு ,
மாற்றத்தின் மதிப்பு ஒரு கூறு ,
மதிப்பின் வழிமுறைகள் ஒரு கூறு ,
வழிமுறைகளில் உண்மை ஒரு கூறு ,
உண்மையின் தன்மை ஒரு கூறு ,
தன்மையின் மென்மை ஒரு கூறு ,
மென்மையின் மேன்மை ஒரு கூறு ,
மேன்மையின் விரிவு ஒரு கூறு ,
விரிவின் வாழ்வு ஒரு கூறு ,
வாழ்வின் உயிர் ஒரு கூறு ,
உயிரின் மொழி ஒரு கூறு .
எழுதியவர்
வழக்கறிஞர் இராஜசேகரன்
வலைப்பூ (http://nanduonorandu.blogspot.com)
Related Articles :
0 comments:
Post a Comment