மக்கா மசூதி குண்டு வெடிப்பு: சுவாமி ஆசிமானந்தாவிடம் சிபிஐ விசாரணை!


மக்கா மசூதி குண்டு வெடிப்பு: சுவாமி ஆசிமானந்தாவிடம் சிபிஐ விசாரணை!

Link to இந்நேரம்.காம்

மக்கா மசூதி குண்டு வெடிப்பு: சுவாமி ஆசிமானந்தாவிடம் சிபிஐ விசாரணை!

Posted: 28 Nov 2010 01:21 PM PST

2007ஆம் ஆண்டு ஹைதராபாத் மக்கா மசூதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சுவாமி ஆசிமானந்தாவிடம் சிபிஐ விசாரணையைத் தொடங்கியது.

ஷெய்க் ராயித் ஸலாஹ் விரைவில் விடுதலை செய்யப்படுவாரா?

Posted: 28 Nov 2010 12:02 PM PST

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமது தலைவர் ஷெய்க் ராயித் ஸலாஹ் அடுத்த மாத ஆரம்பத்தில் விடுதலை செய்யப்படவுள்ளார் என 1948 ஆம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் பிரதேசங்களுக்கான இஸ்லாமிய அமைப்பின் துணைத் தலைவர் கமால் அல் காதிப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைத் தாக்குல் - நால்வர் படுகாயம்

Posted: 28 Nov 2010 11:57 AM PST

காஸாவின் வடக்குப் பிராந்தியத்தில் சரளைக் கற்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பலஸ்தீன் கூலித் தொழிலாளர்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் நால்வர் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருமண உதவித் திட்டம் - ஜெக்கு ஸ்டாலின் பதில்

Posted: 28 Nov 2010 08:57 AM PST

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமணத் திட்டம் நிறுத்தப்பட்டது என ஸ்டாலின் கூறியது உண்மைக்கு புறம்பான தகவல் என தெரிவித்திருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியி்ட்டுள்ளார். அதி்ல் அவர் தெரிவித்திருப்பதாவது 

இந்தியா- நியூஸிலாந்து முதல் ஒருதின போட்டி, இந்தியா வெற்றி

Posted: 28 Nov 2010 07:01 AM PST

குவஹாத்தி (அஸ்ஸாம்): இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் ஒருதின போட்டியில் இந்தியா அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. இந்தியாவின் இளம் வீரர் விராட் கொஹ்லி சதமடித்து இந்திய வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

கருணாநிதியின் cheap political gimmicks….!

Posted: 28 Nov 2010 05:15 AM PST

 

 

 

தன்னிடம் லஞ்சம் கேட்டதை இவ்வளவு காலம் கழித்து சொல்கிறாரே டாட்டா? - அன்பு, கடலூர்

"நேரம் பாத்துச் சங்கு ஊதுறவந்தான் வெவரந்தெரிஞ்ச ஆண்டி" என ஊர்ப்பக்கம் சொல்வதைக் கேட்டதில்லையா? இபோது பொருத்தமான நேரம் வந்துள்ளதால் சொல்லிவிட்டார் ரத்தன் டாட்டா!

நீரா ராடியா பேச்சுகள் வெளியீடு - உச்ச நீதிமன்றத்தை நாடுகிறார் டாடா!

Posted: 28 Nov 2010 02:45 AM PST

அரசியல் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் அதிகாரப்பூர்வமற்ற வகையில் வெளியிடப்பட்டதை எதிர்த்து, இதை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டாடா குழுமங்களின் தலைவர் ரட்டன் டாடா உச்ச நீதிமன்றத்தை நாட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

குடியிருப்பு பகுதியில் விழுந்த விமானம்

Posted: 28 Nov 2010 01:12 AM PST

ரஷ்ய கார்கோ விமானம் ஒன்று பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கிடையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 8 சிப்பந்திகளும் உயிரிழந்தனர்.   20 வீடுகள் சேதமடைந்ததுடன் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.மக்கள் அதிகம் வாழும் குடியிருப்பு பகுதியிலிருந்து சில அடிகள் தள்ளி விழுந்ததினால் மேலும் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

காயமடந்தார் ஒபாமா - 12 தையல்கள் போடப்பட்டன!

Posted: 27 Nov 2010 11:17 PM PST

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூடைப்பந்து விளையாடும் போது காயமடைந்ததால் அவருக்கு பனிரெண்டு தையல்கள் போடப்பட்டன.

ஐபிஎல் 4 - கொச்சி அணி தொடருகிறது ?

Posted: 27 Nov 2010 09:48 PM PST

நாக்பூர் (மஹாராஷ்டிரா): அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும்  ஐபிஎல் 4 போட்டிகளில் கொச்சி அணி விளையாடும் என தெரிகிறது. கொச்சி அணியின் பங்குதாரர்களிடையே ஏற்பட்ட உட்பூசல்கள் கடைசி நேரத்தில் சரிசெய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

போக்குவரத்து சங்க அங்கீகார தேர்தல் - 70 சதவீத வாக்குகளை பெற்று திமுக முன்னணி!

Posted: 27 Nov 2010 09:22 PM PST

போக்குவரத்து தொழிற்சங்க அங்கீகார தேர்தலில், தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற பேரவை 70 சதவீத வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

திமுகவுடன் உறவைத் துண்டித்தால் துண்டிப்பவர்களுக்கே நஷ்டம் : கருணாநிதி

Posted: 27 Nov 2010 09:13 PM PST

தி.மு.க.வுடனான காங்கிரஸ் உறவை துண்டிக்க நினைத்தால் துண்டிக்கிறவர்களுக்குதான் நஷ்டம் என முதல்வர் கருணாநிதி கூறினார்.

டிஜிபியாக லத்திகா சரண் மீண்டும் நியமனம்!

Posted: 27 Nov 2010 01:34 PM PST

1976ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த லத்திகா சரணை மீண்டும் டிஜிபியாக நியமித்து தமிழக அரசு சனிக்கிழமையன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஓடும் ரயிலில் டிரைவர் மாரடைப்பால் பலி!

Posted: 27 Nov 2010 11:24 AM PST

மிட்னாப்பூர்: மேற்கு வங்காளத்தில் ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இன்ஜின் ஓட்டுனருக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனாலும்  ரயிலை அவர் பத்திரமாக ரயில் நிலையத்தில் நிறுத்தியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

விக்கிலீஸ் மிரட்டல்: அமெரிக்கா, இந்தியாவுக்கு எச்சரிக்கை!

Posted: 27 Nov 2010 02:59 AM PST

அமெரிக்க இராணுவ இரகசியங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் இணைய தளம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இஸ்ரேல், ரஷ்யா, துருக்கி மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றி செய்திகள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

என் மகன்கள் என்னை பார்ப்பதை விரும்பவில்லை : பாலிவுட் நடிகர் ஹிர்திக் ரோஷன்

Posted: 27 Nov 2010 02:15 AM PST

மும்பை : பிரபல பாலிவுட் நடிகரான ஹிர்திக் ரோஷன் கடந்த ஞாயிறன்று நோய் எதிர்ப்பு மாத்திரையை உட்கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின்னும் ஹிர்திக் தன் மகன்கள் தன்னை பார்ப்பதை விரும்பவில்லை என்று கூறி அவர்களை பார்க்க மறுத்து விட்டார்.

கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!

Posted: 26 Nov 2010 11:10 PM PST

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஏதோ கறைபடிந்துள்ளது என்று வெள்ளிக் கிழமையன்று மிகவும் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ள உச்ச நீதிமன்றம், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நேர்மை குறித்துக் கேள்வி எழுப்பி கவலை தெரிவித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இலங்கைத்தமிழர் கைது!

Posted: 26 Nov 2010 11:08 AM PST

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் இலங்கைதமிழர் ஒருவர் தனது விசா காலம் முடிந்த பின்னும் சட்ட விரோதமாக தங்கியிருந்து மீண்டும் இலங்கை செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டார்.

சிறுமியை நாள் முழுவதும் வன்புணர்ந்த ஜெயில் ஊழியர்கள்!

Posted: 26 Nov 2010 10:44 AM PST

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுமியை கடத்தி ஒருநாள் முழுவதும் ஜெயில் ஊழியர்கள் வன்புணர்ந்த கொடூர சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும்  ஏற்படுத்தியுள்ளது.

BMW கார்கள் உட்பட சென்னையில் சுமார் 13 இலட்சம் கார்கள் உற்பத்தி

Posted: 26 Nov 2010 07:16 AM PST

சென்னை: வரும் நிதி ஆண்டிற்குள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் உள்ள கார் தொழிற்சாலைகளிலிருந்து வருடத்திற்கு சுமார் 13 இலட்சம் கார்கள் தயாராக இருக்கின்றன.

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...