திருமணமானதும் நிர்வாண போட்டோ எடுத்துக் கொள்ளும் சீன ஜோடிகள்!






ஷாங்காய்: திருமணமானதும் சீன ஜோடிகள் செய்யும் முதல் காரியம் என்ன தெரியுமா... 'முதலிரவுதானே' என்று கேட்டு விடாதீர்கள்.

அதற்கு முன்பே, இந்த ஜோடிகள் நேராக ஸ்டுடியோக்களுக்குப் போகிறார்களாம். நிர்வாணமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்துக் கொள்கிறார்களாம்.

ஏன் இந்த விபரீதம்?

'வேறு ஒன்றுமில்லை... திருமணமான பிறகு கணவன் -மனைவி இருவரின் உடல் அமைப்புமே மாறிப்போகிறது. இளமையாக, வனப்பாக இருக்கும்போதே ஒரு நிர்வாணப் படம் எடுத்துக் கொண்டால், பின்னாளி்ல் பார்த்து மகிழ உதவுமே.. இன்னொன்று அதில் இருக்கும் கிக்கே தனி...!'

- இதுதான் அந்த ஜோடிகள் தரும் விளக்கம்.

சீன நாட்டு சட்டப்படி, இப்படி நிர்வாண புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது தப்பில்லையாம். அவற்றை பொதுவில் பார்வைக்கு விடுவதுதான் பெரிய குற்றமாம்.

இதற்கிடையே, இந்தமாதிரி படம் எடுக்க எந்த ஸ்டுடியோவையும் இனி அனுமதிக்கக் கூடாது என ஷாங்காய் திருமண வர்த்தக சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது. ஆனால் தடைவிதிக்கக் கூடாது என நிர்வாணப் படம் எடுத்துக் கொண்ட ஏராளமான திருமண ஜோடிகள் குரல் கொடுத்துள்ளனர்.



அனுப்பியவர் அணு
sorce http://thatstamil.oneindia.in/

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...