உண்மையான அன்பு - நெகிழ்வூட்டும் சிறுகதை


உண்மையான அன்பு - நெகிழ்வூட்டும் சிறுகதை

Link to இந்நேரம்.காம்

உண்மையான அன்பு - நெகிழ்வூட்டும் சிறுகதை

Posted: 08 Nov 2010 08:26 AM PST

நவம்பர் மாத குளிர் நேரத்தில் அதிகாலை 7 மணிக்கு 80 வயது மதிக்கத்தக்க முதியவர் என்னை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்தார். தன் பெருவிரலில் உள்ள காயத்திற்காக போடப்பட்டிருந்த கட்டை அவிழ்த்து டிரெஸ்ஸிங் செய்வதற்காக வந்ததாக தெரிவித்தார் தனக்கு ஓர் முக்கிய அப்பாயிண்ட்மென்ட் 7.30 மணிக்கு உள்ளதால் விரைவில் சிகிச்சையளிக்கும் படி வேண்டினார்.

E-Publishingக்கு ஆள்கள் தேவை!

Posted: 09 Nov 2010 09:03 AM PST

சென்னை மவுண்ட் ரோடு மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய பகுதிகளில் பணியாற்ற ஆள்கள் தேவை. புதியவர்களும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அடிப்படை கணினி அறிவும் தட்டச்சும் தெரிந்தால் போதுமானது. மேலும் விவரம் வருமாறு:

இராணுவத்தில் சேருவதற்கான நுழைவு தேர்வு

Posted: 09 Nov 2010 09:07 AM PST

இந்திய ராணுவத்தின் தரை படை (Army), கப்பல் படை (Navy), விமான படையில் (Air Force ) சேருவதற்கான நுழைவு தேர்வு "NDA & NA Exams" அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது இன்ஷா அல்லாஹ். அதற்கான விண்ணப்பம் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றது. விண்ணப்பத்தைச் சமர்பிக்க கடைசி தேதி நவம்பர் 15 ஆகும். இந்தத் தேர்வு  எழுத +2 வரை படித்திருந்தால் போதும்.

புற்றுநோய் மருத்துவத்தில் புதிய முன்னேற்றம்

Posted: 10 Nov 2010 01:30 PM PST

புற்றுநோய் பெரும்பாலும் குணப்படுத்த இயலாத நோயாகவே உலகம் முழுதும் கருதப்படுகிறது.  புற்றுநோய்க்கிருமிகள் அதற்கான அழிப்புமருந்துகளினும் அதிக வீரியம் பெறுவது எப்படி என்பது ஆய்வாளர்களுக்கு புதிராக இருந்துவந்தது. இந்நிலையில் புற்றுநோயாளிகளைக் குணப்படுத்த புதிய வழிமுறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது

ஃபேஸ்புக் மின்னஞ்சல் சேவையைத் தொடங்குகிறது!

Posted: 14 Nov 2010 12:58 PM PST

முன்னணி சமூக இணையதளமான ஃபேஸ்புக் கூகிள் மற்றும் யாஹூ நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தன்னுடைய உபயோகிப்பாளர்களுக்கு இலவச மின்னஞ்சல் சேவையை வழங்க உள்ளது.

"பேரழிவுகளுக்கு பிரபாகனே காரணம்"- தயா மாஸ்டர் குற்றச்சாட்டு

Posted: 16 Nov 2010 05:55 AM PST

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரில் ஏற்பட்ட பேரழிவுகளுக்கு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனே காரணம் என தயா மாஸட்டர் கூறியுள்ளார்.

திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!

Posted: 16 Nov 2010 11:11 AM PST

2ஜி அலைக்கற்றை ஏலத்தில் நடைபெற்ற முறைகேடுகளுக்காக தி மு க வின் மத்திய தகவல் தொழிற்நுட்ப தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ராஜா பதவிவிலகிவிட்டாலும் இந்தப் பதவி விலகலுக்குப் பின்னிருக்கும் செய்திகள் சுவாரசியமானவை. இந்தப் பதவி விலகலுக்கு ஊடக அழுத்தங்களும்  ஒரு காரணமாக அமைந்தன எனில் மிகையாகாது.

ஸ்க்ரீன் மோட்

Posted: 17 Nov 2010 03:20 AM PST

ஹலோ அன்பர்களே,


இதுவரை  Tabbed Window, Tools, Panels, Keyboard, Custom  ஆகியவற்றை முறைப்படி தெரிந்துகொண்டோம். இப்போது நாம் கற்கவிருப்பது Screen Mode ஆகும்.

அத்தியாயம் - 23 : மன ஒத்திகை

Posted: 19 Nov 2010 03:26 AM PST

மனம் மகிழுங்கள்!

23 - மன ஒத்திகை

ற்பனை செய்ய ஆரம்பிச்சாச்சு - அடுத்து?

கற்பனைகளை நம் செயல்பாடுகளின் முன்னேற்றத்திற்கு எப்படி உபயோகிப்பது?

ரீடர்ஸ் டைஜஸ்டை (Reader's Digest) அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆங்கிலப் பத்திரிகை. பத்திரிகை நடத்துபவர்களுக்கென்று அசாத்திய கற்பனைத் திறன் இருக்க வேண்டும். புதுசு புதுசாய் யோசிக்க வேண்டும். அப்பொழுதுதான் வாசகரைக் கவர, தக்க வைத்துக் கொள்ள முடியும்; இல்லையா? எனவே யோசித்தார்கள். பத்திரிகையின் சார்பில் ஆய்வொன்று செய்வது என்று முடிவு செய்தார்கள். எதைப் பற்றி? மன ஒத்திகையைப் பற்றி!


ஒரு பள்ளிக்கூடத்தைத் தேர்ந்தெடுத்து அதில் குறிப்பிட்ட சில மாணவர்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அந்த மாணவர்களை மூன்று அணிகளாகப் பிரித்துக் கொண்டு முதல் அணி ஒரு மாத காலத்திற்கு ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் கூடைப்பந்தைக் கூடையினுள் வீசும் பயிற்சியை மேற்கொள்ளச் செய்தார்கள். அடுத்த அணிக்கு எந்தப் பயிற்சியும் கிடையாது. சும்மா இருக்க வேண்டும். மூன்றாவது அணி பந்து வீசும் பயிற்சியைத் தினமும் ஒரு மணி நேரம் மனதில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

ஆய்வின் முடிவில் தினமும் பந்து வீசிப் பயிற்சி பெற்ற அணியின் திறமை சராசரியாக இரண்டு சதவிகிதம் உயர்ந்திருந்தது. வெறுமே இருந்த அணியின் திறமை இரண்டு சதவிகிதம் மட்டுப்பட்டிருந்தது. மனதளவில் தினமும் பயிற்சி பெற்றதே மூன்றாவது அணி, அவர்களின் திறமை மூன்றரை சதவிகிதம் அதிகரித்திருந்தது. ஆச்சரியமாயில்லை? செய்முறைப் பயிற்சியைவிட மனப் பயிற்சிக்கு அதிக மகத்துவம் உள்ளது என்று முடிவுரை வாசித்தது அந்த ஆய்வு!

யதார்த்தம் என்னவென்றால் நாம் இதெல்லாம் அறியாமலேயே நமது வாழ்க்கையில் தன்னிச்சையாக மனப் பயிற்சி மேற்கொள்ளத்தான் செய்கிறோம். அலுவலகத்திற்குச் செல்ல மோட்டார் பைக்கை ஸ்டார்ட் செய்யும் முன்னமேயே எந்தச் சாலை வழியே போகப் போகிறோம், மீட்டிங்கிற்குத் தாமதமாகி விட்டதே அதனால் எவ்வளவு விரைவாக ஓட்டப் போகிறோம், என்பதைப் போன்ற சிறிய ஒத்திகைகள் மனதளவில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அதை நம் மனம் உணர்வதில்லை.

ஆனால் சில சமயங்களில் மட்டும் நீங்கள் உணரக்கூடும். எப்பொழுது? மனைவியிடம் பொய் சொல்லும்போது!

லேட்டாக வீட்டிற்குத் திரும்ப நேர்ந்தாலோ, மனைவிக்குத் தெரியாமல் நண்பருடன் சினிமா அது இது என்று சுற்றிவிட்டு வந்தாலோ, நுழைந்ததுமே "ஏன் லேட்டு?" என்று ஆரம்பித்து, போலீஸ் விசாரணையாய் வந்து விழப் போகும் கேள்விகளை என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று மனதில் ஓர் ஒத்திகை ஓடுமே, கவனித்ததில்லை?

நாம் அனைவரும் அறிந்த கிரிக்கெட் விளையாட்டு உதாரணமொன்றைப் பார்ப்போம். சுழன்று வரும் பந்தை எப்படி அடிக்க வேண்டும் என்று உங்கள் மூளையிலுள்ள செல்கள் கட்டளையிடுகின்றன. கம்ப்யூட்டர் ப்ரோகிராம் போல் வருகிறது கட்டளை. உங்கள் உடல் அதற்கேற்ப அந்தக் கட்டளைகளை நிறைவேற்றுகிறது. உங்கள் மனதிலுள்ளது நல்ல ப்ரோகிராம் என்றால் நீங்கள் நல்ல ஆட்டக்காரர். பந்து பவுண்டரி கோட்டைத் தொட்டிருக்கும். "என்னால் இந்த ஸ்பின்னையெல்லாம் தாங்க முடியாது", என்று மனதில் கற்பனையிருந்தால் ஒன்றிரண்டு ஸ்டம்புகள் காலி! தினசரி இந்த விளையாட்டிற்கானப் பயிற்சியை நீங்கள் மேற்கொள்ளும்போது, சந்தேகமேயின்றி உங்களின் திறமை மேம்படும். நிச்சயம் மேம்படும். ஆனால், உடல்ரீதியான பயிற்சி மட்டுமே போதும், என்று நீங்கள் நினைத்தால், "போதாது" என்கிறார்கள் மன ஆய்வாளர்கள்.

நாள்தோறும் உடல்ரீதியான பயிற்சியை மேற்கொள்வதுடன் சேர்த்து மனப் பயிற்சியையும் சரியான முறையில் செய்தால் விரைவாகம் சிறப்பாகவும் திறமையை மேம்படுத்த முடியும் என்பதை அழுத்தமாய்ச் சொல்கிறார்கள். ஒரு காரியத்தைச் செய்வதுபோல் நீங்கள் கற்பனை செய்யும்போது அதை உண்மையிலேயே நிகழ்த்துவதைப் போல் உங்கள் மனதிலுள்ள ப்ரோகிராம்களை நீங்கள் வடிவமைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் மூளையிலுள்ள செல்களில் ரசாயண மின்மாற்றம் நிகழ்கிறது. அவை உங்கள் மனதில் புதிய மாற்றத்தைத் தோற்றுவிக்கிறது. மனம் உங்களுக்கு ஆற்றும் மாபெரும் உதவி அது என்பது அவர்களது வாதம்.

நேர்முகத் தேர்விற்குத் தயாராகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கூகுளிலில் ஆரம்பித்துப் பல புத்தகங்கள் வரை பிரித்து மேய்ந்தாச்சு! அந்த ஹோம்வொர்க் மட்டும் போதுமென்றா இண்டர்வியூவிற்குச் செல்வீர்கள்? அவர்கள் கேட்கப் போகும் கேள்விகளுக்கு எப்படியெல்லாம் பதில் அளிக்க வேண்டும், அல்லது எப்படி பதில் அளிக்கக் கூடாது, எவ்விதம் அமர வேண்டும், என்ன சட்டை அணிந்து கொள்ள வேண்டும் என்று உள்ளாடை முதற்கொண்டு ஒரு மன ஒத்திகை நிகழ்ந்திருக்குமில்லையா? இவ்விதம் நாம் தன்னிச்சையாய் மேற்கொள்ளும் இந்த மன ஒத்திகையை முறைப்படுத்தி, வளப்படுத்தி செய்முறைப் பயிற்சியுடன் சரியானபடி ஜோடி சேர்த்தால் நம் ஆற்றலை எளிதாய், முழுமையாய் வெளிக்கொணரலாம்.

மன ஒத்திகைகளின் மூலம் நிறைவான செயற்பாட்டிற்கு உண்டான வகையில் நாம் நமது மனதை வடிவமைக்க முடியும். மனதில் நிகழும் அத்தகு ஒத்திகைக் கற்பனைகளில நாம் தவறிழைக்கப் போவதில்லை. எனவே மனம் சரியான செயற்பாட்டிற்குத் தயாராகிறது.

அதேபோல் மனதில் தப்புத் தப்பாய்க் கற்பனை செய்து ஒத்திகை பார்த்தால் நிகழ்வும் அப்படியே அமையும். இதைத்தான் பயந்தது போலவே நடந்துவிட்டது என்கிறோம். எனவே தப்புக் கற்பனை தப்பு. அதைத்தவிர்க்க வேண்டும்.

ஆக, இதனலாலெல்லாம் நாம் அறிய வேண்டியது யாதெனில்,

மனதில் கற்பனை ஒத்திகைகள் நிகழ்த்தி அதன்மூலம் நமது திறமைகளைத் தூய்மையாக்கும் முயற்சியை நாம் ஆரம்பிக்க வேண்டும். பரிட்சைக்குத் தயாராவது, இண்டர்வியூ, புதிதாய் மேடையில் பேசவிருப்பது, திருமணமாகி முதன் முதலாய் மனைவியிடம் பேசப் போவது என்று எதுவாக இருந்தாலும் முற்கூட்டியே நேரம் செலவழித்து மனதில் ஒத்தகை நிகழ்த்திவிடுங்கள். நடப்பவை நலமே நிகழும்.


னம் மகிழ, தொடருவோம்...


மனம் மகிழுங்கள்-22 | மனம் மகிழுங்கள்-24

ஸ்பெக்ட்ரம் ஊழல் -- விடை தெரியா வினாக்கள்

Posted: 19 Nov 2010 01:22 PM PST

டிமை இந்தியாவில் 1881 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தொலைபேசி, சுதந்திர இந்தியாவில் அரசின் கையிலும் கட்டுப்பாட்டிலும்  இருந்தது. இந்தியா சுதந்திரமடைந்த 1947  காலகட்டத்தில் ஐயாயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே தொலைபேசி இணைப்பு  இருந்தது.  பெரிய வணிகர்களும் தொழிலதிபர்களும்  முதலாளிகளும்  பணக்காரர்களும் மட்டுமே தொலைபேசி இணைப்புப் பெற முடியும். தொலைபேசி இணைப்புக் கிடைப்பதற்காக  முன்பணம் கட்டி மாதக்கணக்கில் காத்திருந்து தொலைபேசி இணைப்பைப் பெற வேண்டிய நிலை. பக்கத்து ஊருக்கு   ஓர் அவசரச் செய்தியைத் தெரிவிப்பதற்குக் கூட ட்ரங்க் கால் பதிவு செய்து மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

விக்கிலீக்ஸ் அதிபரை கைது செய்ய நீதிமன்றம் ஒப்புதல்!

Posted: 20 Nov 2010 12:10 PM PST

பிரபல இணையதளமான விக்கிலீக்ஸ்' ன் நிறுவனரான ஜூலியன் அசேஞ்ஜ், மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக அவரை கைது செய்வதற்கான கோரிக்கைக்கு, ஸ்விட்சர்லாந்தின் ஸ்டாக்ஹோம் மாவட்ட நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளதால், அவர் விரைவில் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ராக்கிங் கொடுமை: மாணவர் உயிர் ஊசல்!

Posted: 20 Nov 2010 10:08 PM PST

துர்காபூர்: மேற்கு வங்கத்தின் பாங்குரா மாவட்டத்தின் துர்காபூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது பிஸ்னுபூர் மல்லபம் என்ற கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் அதே கல்லூரியில் பயிலும் மூன்றாமாண்டைச் சேர்ந்த இரண்டு மாணவர்களால் கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்டார். இதனால் அவர் கோமா நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றார்.

பாண்டியர்கள் மட்டும்தான் ஜொள்ளு விடுவார்களா

Posted: 21 Nov 2010 01:01 AM PST

 

 

 

பிரபஞ்சத்தை உருவாக்க கடவுள் தேவையில்லை என்கிறாரே ஸ்டீபன்ஹாகின்ஸ்? - மருதை குமார், கடலூர்

ஸ்டீபன் ஹாகின்ஸ் தன்பங்குக்கு ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கிவிட்டு சொன்னால் நல்லது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைமை அதிகாரி பணி நீக்கம்!

Posted: 22 Nov 2010 12:21 AM PST

ஏர் இந்தியா நிறுவனத்தின் குறைந்த கட்டண விமான சேவையான ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் தலைமை அதிகாரியான பவன் அரோராவை அந்நிறுவனத்தின் இயக்குநர் வாரியம் பதவி நீக்கம் செய்துள்ளது. திரு அரோரா மீது ஊழல் குற்றச் சாட்டுகள் பல எழுந்ததாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கம்போடியா: திருவிழா கூட்ட நெரிசலில் 378 பேர் பலி !

Posted: 23 Nov 2010 09:38 PM PST

கம்போடியாவில் நடைபெற்ற திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 378 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் கம்போடியாவில் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டி: சோம்தேவ் வரலாற்றுச் சாதனை !

Posted: 23 Nov 2010 09:40 PM PST

சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய டென்னிஸ் வீரர் சோம்தேவ் தேவ் வர்மன் முதல் முறையாக தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

திருமணமாகாத இளம்பெண்கள் செல்ஃபோன் உபயோகிக்கத் தடை !

Posted: 24 Nov 2010 02:33 AM PST

முஸஃபர் நகர்: திருமணமாகாத இளம்பெண்கள் காதல் வலையில் சிக்கி தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதைத் தடுக்கும் முகமாக, அவர்கள் செல்ஃபோன் உபயோகிக்க கிராம பஞ்சாயத்து தடை விதித்துள்ள சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தின் முஸஃபர் நகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குவைத்தில் BMS Engineer மற்றும் IT Help Deskக்கு வேலைவாய்ப்பு

Posted: 24 Nov 2010 03:03 AM PST

குவைத்தில் உள்ள பிரபல நிறுவனமான அல்-கானிம் இன்டர்நேஷனல் (Al-Ghanim International) நிறுவனத்தில் கீழ்கண்ட பதவிக்கு தகுதி உடையவர்கள் +965-66185841 எனும் எண்ணை தொடர்பு கொள்ளலாம்

LIC வீட்டு வசதி ஊழல் - தலைமை நிர்வாகி கைது, சிபிஐ அதிரடி

Posted: 24 Nov 2010 06:43 AM PST

புது டில்லி: LIC வீட்டு வசதி நிதி முறைகேடு தொடர்பாக அந்நிறுவன தலைமை நிர்வாகி, இன்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மேலும் மூன்று அரசு வங்கி உயரதிகாரிகள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

தூர்தர்ஷன் ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

Posted: 24 Nov 2010 12:11 PM PST

திருச்சி: தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி நிலைய ஊழியர்கள் போராட்டத்தால், இரண்டாவது நாளாக அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

கனமழை! வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டுகிறது

Posted: 24 Nov 2010 12:44 PM PST

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் கடந்த இருபது நாட்களாக பாசனத்துக்கு நீர் திறந்து விடப்பட்ட நிலையிலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறையாமல் 45.5 அடியாகவே உள்ளது.

பீகார் : காங்கிரஸ் தோல்வி - மகிழ்ச்சியில் திமுக!

Posted: 24 Nov 2010 12:55 PM PST

கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட திமுக - காங்கிரஸ் உறவு கசந்து வருவது தெரிந்ததே. தற்போது பீகார் மாநில சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்திருப்பது திமுகவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...