அமெரிக்கர்களில் பாதி பேருக்கு பதில் தெரியாது-உங்களுக்கு...?







  சூரியனை பூமி சுற்றி வருவதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்ற கேள்விக்கு அமெரிக்காவில் உள்ள 49 சதவீதம் பேருக்கு பதில் தெரியாது என்று, சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

 மருத்துவம், விண்வெளி என பல்வேறு துறைகளில் உலகின் முன்னணி நாடாக இருக்கும் அமெரிக்காவில், பலர் அடிப்படை விஷயங்களை கூட தெரியாமல் உள்ளனர். அமெரிக்கர்களின் உணவுப் பழக்கம், மனப்பாங்கு, நடவடிக்கை, அறிவுக்கூர்மை குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பல தகவல்கள் கிடைத்துள்ளன. அமெரிக்கர்கள் உருளைக்கிழங்கு பிரியர்களாக உள்ளனர். உருளைக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் சிப்ஸ் அங்கு அதிகளவு விற்பனையாகிறது. அமெரிக்கர்கள், கடந்த ஆண்டில் மட்டும்  31 ஆயிரத்து 950 கோடி ரூபாய்க்கு உருளைக்கிழங்கு சிப்ஸ்களை தின்று தீர்த்துள்ளனர். சிப்ஸ் சாப்பிட்டே பல அமெரிக்கர்கள் பொழுதை கழிக்கின்றனர். இதற்காக தங்கள் கையில் உள்ள பணம் முழுவதையும் செலவழிக்க அவர்கள் தயாராக உள்ளனர்.  உருளைக்கிழங்கு சிப்ஸ், எண்ணெயில் பொரித்து தயாராவதால், இதை அதிகமாக சாப்பிடும் அமெரிக்கர்களின் உடல் எடை அதிகரித்து குண்டாகி விடுகின்றனர். தாங்கள் குண்டானது குறித்தும் யாரும் கவலைப்படாமல் தொடர்ந்து அதிகளவில் சிப்ஸ் தின்று தீர்த்து வருகின்றனர்.

  தங்கள் நாட்டு மக்கள் உடல் நலத்தில் அதிக அக்கறை காட்டாமல் குண்டாகி வருவது அமெரிக்க அரசுக்கு பெரிய தலைவலியாக உள்ளது. எனவே, உருளை கிழங்கை எந்த வகையில் சாப்பிடலாம், அதில் எவ்வளவு சக்தி கிடைக்கும் என்பது குறித்து அமெரிக்க அரசும் கடந்த ஆண்டு ஆய்வு செய்வதற்காக 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக  செலவழித்துள்ளது. வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு ஆகியவற்றிற்கு அமெரிக்கா செலவிடுவதை விட இது அதிகமாகும். தற்போது, உருளைக்கிழங்கு சிப்ஸ்சால் ஏற்படும்  ஆபத்தை உணர்ந்துள்ள கல்வி நிறுவனங்கள், அதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. 

அமெரிக்கர்கள் குறித்த மேலும் சில சுவாரஸ்யமான விஷயங்கள்: அமெரிக்காவில் பாதிக்கும் மேற்பட்ட காப்புரிமைகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சென்றுவிட்டன. பத்தில் ஆறு வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்க காப்புரிமையை பெற்றுள்ளன.  அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் முதல் வாலிபர்கள் வரை சராசரியாக 7.30 மணி நேரம் "டிவி, வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர் ஆகியவற்றிற்காக செலவிடுகின்றனர். அமெரிக்காவில் ஒவ்வொரு ஒன்பது வாரத்திற்கும் இன்ஜினியரிங், கணிதம், அறிவியல் ஆகிய துறைகளுக்கு செலவிடும் அளவிற்கு, உடல்  நலத்திற்கும் செலவு செய்யப்படுகிறது.  சூரியனை பூமி சுற்றி வருவதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்பது அமெரிக்காவில் உள்ள 49 சதவீதம் பேருக்கு தெரியாது. அமெரிக்காவில் இன்ஜினியரிங் படிப்பதை விட கலை கல்லூரிகளில் படிப்பதையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். உயிரியல் மருத்துவ ஆய்வறிக்கை வெளியிடுவதில் தற்போது சீனா இரண்டாமிடம் வகிக்கிறது. அமெரிக்காவில் உள்ள பிஎச்.டி., மாணவர்களுக்கு தேவையான பாடங்களை முன்னணியில் உள்ள இரண்டு சீனா பல்கலைக்கழகங்கள் வழங்கி வருகின்றன.




அனுப்பியவர் ஷியாம்
source  http://www.dinamalar.com

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...