சோனியா எந்த மதம் - வழக்கு தள்ளுபடி!


சோனியா எந்த மதம் - வழக்கு தள்ளுபடி!

Link to இந்நேரம்.காம்

சோனியா எந்த மதம் - வழக்கு தள்ளுபடி!

Posted: 29 Nov 2010 01:00 PM PST

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரான சோனியா காந்தியின் மதம் குறித்து தகவல் கேட்டு தொடரப்பட்ட வழக்கை பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜெகன் ராஜினாமா! புதிய முதல்வருக்கு நெருக்கடி!

Posted: 29 Nov 2010 12:56 PM PST

ஹைதராபாத்: ஜெகன்மோகன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதையடுத்து ஆந்திராவின் புதிய முதல்வராக பதவியேற்ற கிரண்குமார் ரெட்டிக்கு சில நாட்களிலேயே  நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

விக்கிலீக்ஸ் - பொறுத்திருந்து செயல்படுவோம் : இந்தியா!

Posted: 29 Nov 2010 12:51 PM PST

விக்கிலீக்ஸ் வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல்களில் இந்தியா குறித்த விவகாரங்களில் பொறுத்திருந்து செயல்படுவோம் என்று இந்தியா அறிவித்துள்ளது. இத்தகவலை வெளியுறவுத்துறை இணையமைச்சர் ப்ரிநீத் கெளர் திங்களன்று டில்லியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இஸ்ரேலியச் சிறையில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்

Posted: 29 Nov 2010 12:16 PM PST

குடும்பத்தினரையோ நண்பர்களையோ சந்திக்கவிடாமல் தடைசெய்து தம்மைத் தனிமைச் சிறையில் அடைத்து வைத்துள்ளமையை எதிர்த்து ஜெனின் அகதி முகாமில் உள்ள ஜமால் அபுல் ஹிஜாவும் பெய்ட் ஃபுரிக்கில் உள்ள அஹத் அபூ கல்மாவும் கடந்த இரண்டு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என அஹ்ரார் எனும் மனித உரிமைகள் மற்றும் கைதிகளுக்கான கற்கைநெறி மையம் தெரிவித்துள்ளது.

இரான் அணு விஞ்ஞானி கார் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்!

Posted: 29 Nov 2010 11:45 AM PST

இரான் நாட்டை சேர்ந்த அணு விஞ்ஞானிகள் இருவர் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடந்த ஒரே மாதிரியான வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

கொழும்புவில் விடுதலைப்புலிகளின் முக்கிய நபர் கைது

Posted: 29 Nov 2010 06:59 AM PST

 விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்த முக்கிய நபர் என கருதப்படும் ஒருவரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரண் என்ற பெயரை உடைய அவர் கொழும்புவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விக்கிலீக் - தகவல் கசிவு இல்லை; திட்டமிட்ட நாடகம் : நஜாத்!

Posted: 29 Nov 2010 06:58 AM PST

அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை விக்கிலீக் இணையதளம் வெளியிட்டது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த ஈரான் அதிபர் அஹமதி நஜாத், இந்தத் தகவல்கள் கசியவில்லை. இவை வெளியிடப்பட்டுள்ளன. இது திட்டமிட்ட நாடகம் என்று கூறியுள்ளார்.

விக்கிலீக்ஸ் - ஆடும் அமெரிக்கா அதிர்வில் உலகம்

Posted: 29 Nov 2010 05:22 AM PST

அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணைய தளம் வெளியிட்டதன் மூலம் அந்த நாடு தற்போது அரசியல் நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. ஏறத்தாழ 250000 ரகசிய ஆவணங்கள் பிரபல பத்திரிகைகளான கார்டியன், நியுயார்க் டைம்ஸ் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய தகவல்கள் வருமாறு:

நடிகர் ஆர்யாவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

Posted: 29 Nov 2010 04:01 AM PST

கடந்த 5.11.2010 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஆர்யா தன்னை ஒரு மலையாளி என அறிமுகப்படுத்தி விட்டு தமிழ் சினிமாவை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.

டிரா ஆனது டெஸ்ட் - சரிந்த சாதனைகள்

Posted: 29 Nov 2010 03:18 AM PST

பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெற்று வந்த முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ஆட்டத்தின் ஐந்தாவது நாளான இன்று இங்கிலாந்தின் குக் இரட்டைச் சதம் அடித்தார். டிராட் சதம் அடித்தார். இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 517 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

ஜெகன் மோகன் ரெட்டி ராஜினாமா? ஆந்திர அரசியலில் பரபரப்பு!

Posted: 28 Nov 2010 10:22 PM PST

மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும் கடப்பா தொகுதி காங்கிரஸ் எம்.பி. யுமான ஜெகன் மோகன் ரெட்டி தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல்-4: சச்சின், டோனியின் விலை 1.84 கோடி!

Posted: 28 Nov 2010 10:19 PM PST

ஐ.பி.எல்-4 கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணி கேப்டன் டோனி ஆகியோர் ஏலத்தின் அதிக விலையான ரூ.1.84 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். சச்சின் மற்றும் டோனி இருவரும் தங்கள் அணிகளான மும்பை மற்றும் சென்னை அணிகளுக்காக விளையாடுவார்கள். மேலும் வீரேந்திர ஷேவாக், ஹர்பஜன் சிங் மற்றும் யுவ்ராஜ் சிங் ஆகியோரும் அதிக பட்ச விலையான  ரூ.1.84 கோடி பட்டியலில் அடங்குவர்.

உலகின் மிக உயரமான அடுக்கு மாடி குடியிருப்பு துபாயில்

Posted: 28 Nov 2010 10:16 PM PST

துபாய் : ஏற்கனவே 823 மீட்டர் உயரமுள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான பர்ஜ் கலீபா அமைந்துள்ள துபாய் நகரத்தில் 107 மாடிகளை கொண்ட உலகின் மிக உயரமான அடுக்குமாடி குடியிருப்பு அடுத்த ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக உதவியாளர் வீட்டில் 5 1/2 லட்சம் நகை, பணம் கொள்ளை!

Posted: 28 Nov 2010 09:47 PM PST

பொள்ளாச்சி அருகே கிராம நிர்வாக உதவியாளர் வீட்டில் சுமார் ஐந்தரை லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.

தஞ்சை பெரிய கோயில் மீது இடி விழுந்தது!

Posted: 28 Nov 2010 09:40 PM PST

தஞ்சையில் நேற்று பெய்த இடியுடன் கூடிய கனமழை காரணமாக தஞ்சை பெரிய கோயில் மீது இடி விழுந்தது. இதனால் தஞ்சையில் பரபரப்பு நிலவுகின்றது.

இந்தியாவின் கருப்புப் பணம் எவ்வளவு - ஆய்வு நடத்த மத்திய அரசு திட்டம்

Posted: 28 Nov 2010 09:03 PM PST

இந்தியாவின் கருப்புப் பணம் எவ்வளவு என்பதை ஆய்வுகள் நடத்தி அறிந்து கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளாக மத்திய நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...