2012 ல் ரோபோவை மணக்கும் பெண்கள் அதிர்ச்சி தகவல் 18 +



இனி வரும் காலம் ரோபோட்களின் காலமாக மலரப் போகிறது. கம்ப்யூட்டர்கள் கையில் மனிதர்கள் இப்போது சிக்கியிருப்பதைப் போல எதிர்காலத்தில் ரோபோட்கள்தான் மனிதர்களின் உற்ற துணையாக விளங்கப் போகின்றன. இதில் செக்ஸ் விஷயத்தில் ரோபோட்கள்தான் இனி மனிதர்களுக்கு பெரும் துணையாக இருக்குமாம்.

அமெரிக்காவைச் சேர்ந்த ரோபோட்டிக்ஸ் விஞ்ஞானியும், பிரபல ஐரோபோட் நிறுவனத்தின் நிறுவனரும், முன்னாள் தலைவருமான பேராசிரியர் ரோட்னி ப்ரூக்ஸ் இதுகுறித்துக் கூறுகையில், டெக்னாலஜி முன்பை விட படு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த டெக்னாலஜி வளர்ச்சி செக்ஸ் விஷயங்களுக்கும் எதிர்காலத்தில் பயன்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

நாம் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு டெக்னாலஜியையும், செக்ஸ் தொடர்பானவற்றுக்கும் பயன்படுத்த முடியும். முதலில் புகைப்படங்கள் வந்தன. அவற்றுக்கும், செக்ஸுக்கும் இடையிலான தொடர்பு உலகறிந்தது. பின்னர் வீடியோ வந்தது. அதற்கும், செக்ஸுக்கும் இடையிலான தொடர்பு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பிறகு இணையதளம் வந்தது. அதன் முக்கிய பலமாகவே செக்ஸ் மாறியுள்ளது. அடுத்து ரோபோட்களின் காலம். எனவே செக்ஸ் மகிழ்ச்சிக்கு ரோபோட்களும் பயன்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

இருப்பினும் செக்ஸ் தொடர்பான விஷயங்களுக்காக மட்டும் பிரத்யேகமாக ரோபோட்கள் தயாரிக்கப்படுமா என்பதை இப்போதே கணிக்க முடியாது. இருப்பினும் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறி விட முடியாது. ஆனால் அதற்குக் காலம் பிடிக்கும்.

ரோபோட் செக்ஸ் பொம்மைகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ரிமோட் கன்ட்ரோல் மூலம் ரோபோட்களை நமது செக்ஸ் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய பயன்படுத்தி முடியும். அதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதீத ஆர்வத்தில் ரோபோட்களை மனிதர்கள் கல்யாணம் செய்து கொள்ளும் அளவுக்குக் கூட நிலைமை எதிர்காலத்தில் போகலாம்.

ஆனால் இதெல்லாம் நடக்க இன்னும் 300 ஆண்டுகளாவது ஆகலாம். நடக்கும் என்று கூற முடியாவிட்டாலும் கூட நடக்காது என்று நிச்சயம் நம்மால் கூற முடியாது என்றார் அவர்.

ரோபோட்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளவரான டேவிட் லெவி கூறுகையில், ரோபோட்களுடன் செக்ஸ் என்பது வேடிக்கையானது. அதேசமயம், நான் ரோபோட்டுடன் செக்ஸ் வைத்துக் கொண்டேன், செமையாக இருந்தது என்று யாராவது காஸ்மோ போன்ற புகழ்பெற்ற பத்திரிகைக்கு பேட்டி கொடுத்து விட்டால் அது காட்டுத் தீ போல பரவ வாய்ப்புண்டு என்பதை மறுக்க மாட்டேன் என்கிறார் லெவி.

இவர் மனிதன்-ரோபோட் இடையிலான உறவுகள் குறித்த ஆய்வை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. இப்போதே செக்ஸ் உணர்வுகளைத் தணிப்பதற்காக ஏகப்பட்ட எலக்ட்ரானிக் சமாச்சாரங்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. சுய இன்பப் பிரியர்களின் ஏகபோக வரவேற்புடன் இவை விற்பனையாகி வருகின்றன. எனவே எதிர்காலத்தில் இவர்களுடன் ரோபோட்களும் இணைந்து 'ரோமியோ'க்களாகும் வாய்ப்பை மறுக்க முடியாது.

ஆக, ஆண்-பெண் உறவு, ஆண்-ஆண் உறவு, பெண்-பெண் உறவு என்ற வரிசையில் இன்னும் சில நூற்றாண்டுகளில் மனிதர்கள்-ரோபோட் இடையிலான காதல் கதைகளை நாம் டிஜிட்டல் மேகஸின்களில் படித்து ரசிக்கலாம். 'மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல' என்ற பாடல் வரி அப்போது செம பொருத்தமாக இருக்கும்.

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...