இரண்டு நாட்களுக்கு முன்பு தெரியாத்தனம்மா என்னுடைய கணினியில் மாதத்தை மாற்றிவேட்டேன் நவம்பர்க்கு பதிலாக ஏப்ரல் என்று. அவ்வளவுதான் என்னால் ப்ளாக்காரில் லாகின் செய்யமுடியல , மற்ற தளங்களில் பின்னூட்டம் போடமுடியல எப்பா தலையே சுத்துற மாதிரி இருந்தது. ஊமை மாதிரி மற்றதளங்களுக்கு சென்று படிப்பதோடு சரி. நானும் firefox ரீஇன்ஸ்டால் செய்துபார்த்துட்டேன் OS மாத்தி பார்த்துட்டேன் வைரஸ் ஸ்கேன் செய்து பார்த்துட்டேன் ஒன்னும் வேலைக்காகல. கடைசியா ஒவ்வொன்றாக சரி செய்து பார்க்கும்போது தான் கணினியில் மாதத்தை சரி செய்து பார்த்தேன் அதன்பின் தான் என்னால் பதிவு போட முடிந்தது.
****************************************************************************************************************
நேற்றுதான் மைனா படம் பார்த்தேன் பயப்புள்ளைங்க என்னாமா நடிச்சிருக்குங்க. தமிழ் சினிமாவில் இப்போது மாஸ் ஹீரோக்கள் படங்களை விட இதுபோன்ற கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் படங்களை மக்கள் வரவேற்க ஆரம்பித்து விட்டார்கள் நல்லதுதான். ஆனால் ஒருசிலர் படம் எடுக்கிறேன் என்று கண்ட கருமத்தை படம் பிடித்து போடுகின்றனர், திருட்டு சிறுக்கின்னு ஒருபடத்தோட புகைப்படங்களை பார்த்தேன் அந்த படத்த எடுத்தவனை நாடு கடத்துவதே சிறந்தது.
இந்த புகைப்படத்தை பாருங்கள் உங்களுக்கே புரியும்(குடும்பத்தோடு படிப்பவர்கள் பார்க்க வேண்டாம் ):

http://ottran.com/wp-content/flgallery/images/2svyhz49.jpg
http://lh4.ggpht.com/_OMHy_G6FX48/TK2RB6YfckI/AAAAAAAAHZQ/aTYNzKbVlVI/Thiruttu-Sirukki-1.jpg
நாம் முயன்றால் இதுபோன்ற படங்கள் வெளிவருவதையும், பல பெண்களின் வாழ்க்கை சீரழிவதையும் தடுக்க முடியும்.
***************************************************************************************************************
சென்னையில் பொருட்காட்சி நடக்கும்போதெல்லாம் அங்கே வண்ணமீன்கள் வைக்கப்பட்டு உள்ளே செல்ல கட்டணத்தொகை வசூலிக்கப்படும் நாமும் பணத்தை செலுத்தி உள்ளே சென்று பார்த்தால் இருட்டில் ஏதோ ஒரு சில மீன்கள் மட்டுமே பார்க்கமுடியும். இதுப்போன்ற வண்ணமீன்களை பார்க்க விரும்புபவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அருகில் உள்ள மூர் மார்க்கெட்டில் விற்கப்படும் மீன்களை நேரம் இருக்கும்போது பார்க்கவும். கீழ் தளத்திலும் முதல் தளத்திலும் பல விலை உயர்ந்த வண்ணமீன்கள் விற்கும் கடைகள் உள்ளது அந்த வழியாக செல்பவர்கள் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் பல வண்ணமீன்களையும், பறவைகளையும் இலவசமாக பார்க்கலாம். குழைந்தைகளை அழைத்து சென்றால் ஒரு பொருட்காட்சி போன்று தான் வேடிக்கை பார்ப்பார்கள்.
பி.கு: மூர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்க நினைப்பவர்கள் கொஞ்சம் பேரம் பேச தெரிந்திருக்க வேண்டும், மற்ற இடங்களை விட இங்கே குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கிவிடலாம். புதிதாக செல்பவர்கள் வேடிக்கை பார்ப்பதோடு வீடு திரும்பினால் நிம்மதியோடு திரும்பலாம்.
****************************************************************************************************************
அரசியலில் தேர்தல் பயம் இப்போதே நம் அரசியல்வாதிகளுக்கு வர ஆரம்பித்துவிட்டது. பல ஆர்ப்பாட்டங்களில் ஜெயலலிதா பேசும்போது நீங்கள் எதிர்ப்பார்க்கும் கூட்டணி அமையும் என்று சொல்லும்போதெல்லாம் நான்கூட ஏதோ மாஸ்டர் ப்ளான் வெச்சி இருக்காங்க போல என்று நினைத்திருந்தேன். ஆனால் மறைமுகமாக ஆங்கில தொலைக்காட்ச்சி வழியாக பேட்டி கொடுக்கிறேன் என்று சீப்பாக காங்கிரஸ்சை கூட்டணிக்கு அழைத்ததை(கணினி பயன்படுத்தும் நமக்குதான் இந்த விஷயம் தெரியும் கணினி பயன்படுத்தாத பல கோடி தமிழர்களுக்கு இதுபற்றி தெரியாது) பார்க்கும்போது கருணாநிதியின் அரசியல் தந்திரங்களில் இவர் குழந்தையாகதான் தெரிகிறார். அதே போல் மேடையில் பேச எழுதிகொடுப்பவர்கள் தரம் கெட்ட வார்த்தைகளையும் எழுதி கொடுக்கின்றனர். ஒரு முன்னாள் முதல் அமைச்சருக்கு இப்படியா எழுதிகொடுப்பது. இவர் மேடைகளில் மைனாரிட்டி தி.மு.க அரசு என்று சொல்லும்போதெல்லாம் "20 மதிப்பெண் பெற்று தேர்வில் தோல்வி அடைந்தவன் 35 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தவனை பார்த்து "ஜஸ்ட் பாஸ்" "ஜஸ்ட் பாஸ்" என்று கிண்டல் செய்வது போல்தான் உள்ளது.(( அண்ணே நீங்க SSLC பெயில்னே நான் எட்டாங்க்லாஸ் PASS) FAIL பெருசா பாஸ் பெருசா? இப்படியும் வெச்சிக்கலாம்).
***************************************************************************************************************
எங்க ஊர்ல்ல பாட்டன் பூட்டானில் இருந்து எங்க தாத்த அப்பா வரைக்கும் எல்லாரும் படிக்க ஆசைப்பட்டு இப்ப எங்க தலைமுறையினர்தான் படிக்க ஆரம்பிச்சி இருக்கோம் ஆனால் இந்த பெருசுங்க பண்ற தொல்ல இருக்கே தாங்க முடியல எதுக்கெடுத்தாலும் "படிச்சிருக்கல இது கூட தெரியாதா" இந்த ஒரு கேள்விதான். சாத்துக்குடிய நேரா வேட்டலனா கூட இந்த கேள்விதான் கேக்குதுங்க . ஸ்கூல்ல என்ன சாத்துக்குடி எப்படி வேட்டுரதுனா சொல்லிதராங்க.
****************************************************************************************************************
என்கவுண்டர் பண்ணனும்:
சில நாட்களுக்கு முன்பு கோவையில் என்கவுண்டர் பண்ணதா கேள்வி பட்டேன் இதே மாதிரி எங்க ஊர்ல்லையும் ஒருத்தன என்கவுண்டர் பண்ணனும். ஒரு சின்ன ப்ளாஷ் பேக், அப்ப எனக்கு ஒன்பது வயசு இருக்கும் நான் நாலாவ்ம்பு படிச்சிகிட்டு இருந்தேன் என் வகுப்புல படிச்ச கவிதா ரொம்ப அழகா இருப்பா நான் எங்க வீட்டு மரத்துல இருந்து புளியங்காலாம் பரிச்சி கொடுத்து அவள உசார் பண்ணி வெச்சி இருந்தேன் அவளுக்கு என்ன ரொம்ப பிடிக்கும் திடிர்னு ஒருநாள் அஞ்சாவது படிச்சிகிட்டு இருந்த ராஜான்ற பையன் அவுங்க வீட்ல்ள இருந்து கொருக்களிக்காவ பறிச்சிட்டு வந்து அவளுக்கு கொடுத்து உசார் பண்ணிட்டான். அன்னையில்ல இருந்து அவ எங்கிட்ட சரியா பேசுறது இல்ல அப்படியே நாள் ஆக ஆக என்ன மறந்துட்டா. இப்ப அவ எங்க இருக்கானு தெரியல. ஆனால் கொருக்களிக்காவ கொடுத்து என் ஆள உசார்ப்பன்னவன் இன்னைக்கு ஏதோ ஒரு மூலைல சந்தோஷமா சிரிச்சிட்டு சுத்திக்கிட்டு இருக்கானு நினைக்கும்போது என்னால நிம்மதியா தூங்க முடியல. சைலேந்திர பாபு சார் அவன எப்படியாவது என்கவுண்டர் பண்ணுங்க சாரி பண்ணுறோம்.
****************************************************************************************************************
சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம், அரசு கொடுத்த இலவச தொலைக்காட்ச்சியை தலையில் சுமந்து கொண்டு ஒரு முதியவர் நடந்து வரும்போது எதிர்பாராமல் ரோட்டில் இருந்த ஒரு பள்ளத்தில் கால் தடுமாறி கிழே விழுந்து விட்டார். அதனால் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் தலையில் வைத்திருந்த டீவியும் கீழே விழுந்து உடைந்து விட்டது. நம் மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் எது முக்கியம் டீவியா இல்ல நல்ல சாலையா. இது போன்ற இலவசங்களை மக்கள் ஆதரிக்காமல் எதிர்க்க கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அடுத்த தேர்தலில் CD PLAYER இலவசமாக கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.
***************************************************************************************************************
ஜோக்:
முன்பெல்லாம் சர்த்தார்ஜி ஜோக் அப்படினாதான் பேமஸ் ஆனால் இப்ப இந்த ஜோக் சொன்னாதான் சிரிக்கிறாங்க
***************************************************************************************************************
கவிதை:

****************************************************************************************************************
அப்போ: கடமை கண்ணியம் கட்டுப்பாடு.
இப்போ: மின்சாரம் வெங்காயம் தட்டுப்பாடு.
****************************************************************************************************************நான் ரசித்த புகைப்படம்:
***************************************************************************************************************
நகைச்சுவை புகைப்படம் :
***************************************************************************************************************
எழுதியவர்
☼ தொப்பி தொப்பி ☼
வலைப்பூ (http://thoppithoppi.blogspot.com/2010/11/15112010.html)
0 comments:
Post a Comment